ராமராஜன் படம் இத்தனை நாள் ஓடிடுச்சா.. சாமானியன் வெற்றி விழா கொண்டாட்டத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ராமராஜன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக நடித்த சாமானியன் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பாக வெளியானது. ராஹேஷ் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் திரைப்படம் மே 23ம் தேதி வெளியான நிலையில், அந்த படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால், சாமானியன் திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடிவிட்டதாக நேற்று ராமராஜன் வெற்றி விழா ஒன்றை நடத்தியுள்ளார்.

அதை பார்த்த இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ராமராஜனை கலாய்த்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனது என்றும் இதெல்லாம் நம்பும்படியாக இருக்கிறதா என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

Blue Sattai Maran

சாமானியன் படத்திற்கு தயாரிப்பாளர் சரியாக புரமோஷன் செய்திருந்தால் படம் நல்லா போயிருக்கும் என சமீபத்தில் ராமராஜன் பேசிய நிலையில், வெற்றி விழா நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிகம்: மீனாட்சி குங்குமம் படத்தில் சைடு ரோலில் நடிக்க ஆரம்பித்த ராமராஜன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1986ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராமராஜன் அதன் பின்னர் ஏகப்பட்ட வெள்ளி விழா படங்களை கொடுத்து ரசிகர்கள் மனங்களில் இன்றும் கரகாட்டக்காரனாக நிலைத்து நிற்கிறார். உதட்டில் லிப்ஸ்டிக், கன்னத்தில் ரோஸ் பவுடன் கலர் கலர் சட்டை போட்டுக் கொண்டு எம்ஜிஆர் கணக்கா தமிழ் சினிமாவில் கிராமத்துப் படங்களில் நடித்த ராமராஜனுக்கு இன்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

50வது நாள் கொண்டாட்டம்: ராஹேஷ் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன், ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியான சாமானியன் திரைப்படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து விட்டதாக ராமராஜன் படக்குழுவினருடன் நேற்று வெற்றி விழாவை கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

ப்ளூ சட்டை மாறன் கலாய்: இந்தியன் 2 படத்தையும் அம்பானி வீட்டு திருமணத்தில் ரஜினிகாந்த் ஆடியதையும் கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் அடுத்ததாக "சாமானியன் 50 வது நாள் வெற்றிவிழா: குறுக்க.. இந்த கௌஷிக் வேற..." என ராமராஜனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள்: ராமராஜனுக்கு 3 கோடி ரூபாய் வரை மார்க்கெட் உருவாகி விட்டது என்றும் அடுத்தடுத்து ஹீரோவாக அவர் படம் பண்ணப் போகிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து சினிமாவில் நடிக்க வந்தாலும், 3 கோடி அளவில் அவருக்கு மார்க்கெட் இருப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

டாப் ஹீரோக்கள் படத்தில்: கேப் விடாமல் நடித்துக் கொண்டிருந்தால், இந்நேரம் அவருக்கு பல கோடி பிசினஸ் இருந்திருக்கும். ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் விஜய்யின் கோட் படத்தில் மோகன் நடித்துள்ளதை போல ராமராஜனும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுவரை ராமராஜன் ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த நிலையில், குணசித்ர வேடங்களில் நடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X