ரவி மோகனுக்கு உதவுங்கள் நண்பர்களே.. ப்ளூ சட்டை மாறன் கலாய்.. இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: ஆர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ரவி மோகன். இரண்டு பேரும் காதலின் அடையாளமாக வாழ்ந்துவந்த சூழலில் அவரை பிரிவதாக ரவி கடந்த வருடம் அறிவித்தார். அவரது அந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விரைவில் இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவிருக்கிறார்கள். இந்நிலையில் ரவி மோகனை கிண்டல் செய்து பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் எந்தவிதமான சர்ச்சைகள், விமர்சனங்களிலும் சிக்காமல் இருந்தவர். ஆனால் கடந்த வருடத்திலிருந்து அவரை சுற்றி பெரிய சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அவர் அறிவித்து நீதிமன்றத்திலும் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் இதுவரை தீர்ப்பு வராத நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தன்னுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்ட கெனிஷா பிரான்சிஸுடன் வந்தார். அதனையடுத்து ரவி - ஆர்த்தி - கெனிஷா விவகாரம் மீண்டும் பெரிய பேசுபொருளானது.
ஆர்த்தி மற்றும் ரவியின் அறிக்கை: கெனிஷாவுடன் திருமணத்துக்கு ரவி வந்ததை பார்த்த ஆர்த்தி உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ரவி குறித்தும் தனது காதல் வாழ்க்கை மற்றும் மகன்கள் குறித்தும் ரொம்பவே எமோஷனலாக பேசியிருந்தார். அதற்கு பிறகு ஆர்த்திக்கு திரைத்துறையிலும், ரசிகர்களிடையேயும் ஆதரவு அலை பெருக தொடங்கியது. சூழல் இப்படி இருக்க ரவி மோகனும் தனது பங்குக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'தனது குழந்தைக்கு நடந்த விபத்தை மறைத்துவிட்டார்கள். தந்தை, தாய்க்கு பணம் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு என்னை பொறுப்பேற்க வைத்தார்கள்' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

சுஜாதாவின் விளக்கம்: அவரது அறிக்கையில் மட்டுமின்றி இந்தப் பிரச்னை ஆரம்பத்திலிருந்தே ஆர்த்தியின் தாய் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கத்தில், 'ரவியை நான் ஹீரோவாக, மாப்பிள்ளையாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு மகனாக பார்க்கிறேன். அவர் எனது மகளுடன் இணைந்து வாழ வேண்டும். அழகாக ஒரு வாழ்ந்த ஒரு மகள் இப்போது வாழாவெட்டியாக இருப்பதை பார்க்க்கும் வலி ஒரு தாய்க்கு மட்டும்தான் தெரியும்.
கொடுமைக்கார மாமியார் கிடையாது:நான் ரவியை பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு ரூபாய் கடனுக்காகவாவது அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். நான் கொடுமைக்கார மாமியார் கிடையாது' என்று தெரிவித்திருந்தார். இப்படி மாற்றி மாற்றி அறிக்கை வந்தாலும் விவாகரத்து என்பதில் உறுதியாக இருந்தார் ரவி மோகன். ஆர்த்தியும் தனக்கும் மாதா மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ரவியின் பேச்சு: சூழல் இப்படி இருக்க 3 BHK திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரவி மோகன் பேசினார். அப்போது அவர், "நான் பிறந்ததிலிருந்து சொந்த வீட்டில்தான் இருந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். இந்தப் படத்தில் வந்த பல விஷயங்களை என்னோடு இணைத்துக்கொள்ள முடிந்தது. இப்படம் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. எனது வாழ்க்கையை மீண்டும் வாழப்போவதாகவும்; இனிமேல் நல்லபடியாக வாழப்போகிறேன் என்றும் தோன்றியது" என கூறினார்.
ப்ளூ சட்டை மாறன் கிண்டல்: அவரது அந்தப் பேச்சு சமூக வலைதள்ங்களில் ட்ரெண்டாகிவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "இவரது படங்களை ஹிட் செய்து சொந்த வீடு வாங்க உதவுங்கள் நண்பர்களே" என்று குறிப்பிட்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ரவியை பங்கமாக ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











