அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ சிம்புவா?.. அய்யய்யோ ப்ளூ சட்டை மாறன் இப்படி கலாய்ச்சிருக்காரே
சென்னை: சிம்புவின் முக்கியமான ரோலில் நடித்து வெளியான தக் லைஃப் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த மூன்று படங்களில் அவர் வெற்றிமாறனுடன் இணைந்திருக்கும் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; ப்ளூ சட்டை மாறன் எஸ்டிஆரை கலாய்த்து ட்வீட் போட்டிருக்கிறார்.
சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் தெளிவாக இருக்கிறார். அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹீரோவாக நடித்த தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். முதன்முறையாக கமலுடன் அவர் சேர்ந்திருந்ததால் படத்துக்கு ஹைப் ஏறியிருந்தது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. சிம்புவுக்கும் பெரிய பெயர் எதுவும் கிடைக்கவில்லை.
அடுத்த படங்கள்: இதற்கிடையே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் அவர் விலகிக்கொள்ள; அந்தப் படத்தின் தயாரிப்பு பொறுப்பை சிம்புவே ஏற்றிருக்கிறார். இது சரித்திர படமாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தவிர்த்து டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்த சிம்பு: இந்த இரண்டு படங்களின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும்; கடைசியாக வந்த அறிவிப்பு அதனையெல்லாம் தாண்டி எதிர்பார்க்க வைத்திருக்கிறது. ஏனெனில் வெற்றிமாறனுடன் சிம்பு இணைந்திருக்கிறார். வெற்றி இயக்கிய வடசென்னை படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் இக்கூட்டணி அப்படத்தில் இணைய முடியாமல் போனது. இப்போது அவர்கள் இணைந்திருப்பது கோலிவுட்டி பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வெளியான புகைப்படங்கள்: இப்படம் வடசென்னை உலகத்தில்தான் உருவாகும் என வெற்றி தெளிவுப்படுத்திவிட்டார். அதேசமயம் இது வடசென்னை 2 இல்லை என்பதையும் உறுதி செய்துவிட்டார். சமீபத்தில்தான் இப்படத்தின் ப்ரோமோ ஷூட் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நெல்சன் திலீப்குமாரும் இருந்தார். எனவே இப்படத்தில் அவரும் நடிக்கிறாரோ என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கண்டிப்பாக சம்பவம் செய்யும்: சிம்புவும் வெற்றியும் முதன்முறையாக இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் தரமான சம்பவமாக செய்யும். LCU மாதிரி வடசென்னை யுனிவெர்ஸை வெற்றி உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என மகிழ்ச்சியில் பேசிவருகிறார்கள் சிம்புவின் ரசிகர்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சிம்பு - வெற்றிமாறனை வைத்து மீம் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்.
என்ன மீம் அது?: அதாவது சூதுகவ்வும் படத்தில் அருள்தாஸிடம் பாபி சிம்ஹா, 'நம் படத்துக்காக ஒரு சீன் சொல்லட்டுமா' என கேட்க; அதற்கு அவரை அருள்தாஸ் கலாய்ப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த சீனை எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில், பாபி சிம்ஹாதான் சிம்பு என்றும், அருள்தாஸ்தான் வெற்றிமாறன் எனவும் குறிப்பிட்டு; கலாய்த்து ஷேர் செய்திருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்களோ அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியாக எஸ்டிஆர் மேலே கையை வெச்சிட்டிங்களே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முன்னதாக இதேபோல் அனைத்து நடிகர்களையும் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











