கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா .. பிரபல இயக்குனரின் மகன் இயக்குகிறார் !
சென்னை: தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் கேங்க்ஸ்டராக நடிக்க தயாராகியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார். இக்கதைக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா.

அவள் அப்படித்தான்
தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக் கொண்டால், அதில் 'அவள் அப்படித்தான்', 'கடலோர கவிதைகள்' உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான கே.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர்.

கே.ராஜேஷ்வர்
'அவள் அப்படித்தான்', 'பன்னீர் புஷ்பங்கள்', 'கடலோர கவிதைகள்', 'சீவலப்பேரி பாண்டி', மற்றும் பல படங்களின் கதை, திரைக்கதை,வசனம் எழுதியவர் கே.ராஜேஷ்வர். அதுமட்டுமல்லாமல், 'நியாய தராசு', 'அமரன்', 'துரைமுகம்', 'அதே மனிதன்', 'இந்திர விழா' மற்றும் பல படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆரம்பக்கட்ட பணிகள்
பாபி சிம்ஹா - விக்ரம் ராஜேஷ்வர் இணையும் கேங்க்ஸ்டர் படத்துக்கும் கே.ராஜேஷ்வர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் இதன் மூலமே படத்தின் வெற்றி உறுதியாகிறது. தற்போது இதன் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பட்டை தீட்டப்பட்டு
பாபி சிம்ஹா ஒரு மிக பெரிய வெற்றிக்காக நீண்ட காலம் காத்துக்கொண்டு இருக்கிறார். பல விதமான முயற்ச்சிகள் செய்தும் சரியான கதை தனக்கு ஏற்றார் போல் இன்னமும் அமையவில்லை என்பது பாபியின் வருத்தம். இந்த முறை கண்டிப்பாக பட்டை தீட்ட பட்டு வித்யாசமான ஒரு கதாபாத்திரத்தில் வெற்றியை நிச்சியம் கொடுப்பார் என்று நம்பவோம். இந்த லாக் டவுன் பல சினிமா பிரபலங்களை புரட்டி போட்டு உள்ளது . பல சினிமா வல்லுனர்களையே தள்ளாட வைத்து உள்ளது . நம்பிக்கையுடன் பல புதிய முயற்சிகள் செய்து வரும் இந்த கூட்டணி வெற்றி பெற பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











