Shah Rukh Khan: இப்படி சாகனும்னு ஆசைப்படுறேன்.. ஷாருக்கானின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

சுவிட்சர்லாந்து: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான். இவர் இந்தியாவிலேயே அதிகாரப்பூர்வமாக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூபாய் 250 கோடிகள் சம்பளமாகப் பெருகின்றார். நடிகர் விஜய் தனது கடைசி படமான தளபதி 69இல் ரூபாய் 275 கோடிகள் சம்பளம் வாங்குகின்றார் என பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஆனால் ஷாரூக் கானின் சம்பளமான ரூபாய் 250 கோடி என்பது அதிகாரப்பூர்வமானது. இதுமட்டும் இல்லாமல், ஷாரூக் கான் படத்தாயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். அதிலும் தனது படங்களைத் தயாரித்து பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் செய்து வருகின்றார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் ஷாரூக் கான், இந்தி நடிகர் என்றாலும் இந்தியாவின் முகம் என்றே இவறைக் கூறலாம். இந்தியாவின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு ஏராளம். தனது சினிமாவின் தொடக்க காலத்தில் காதல் மன்னாக நடித்து வந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தார். அப்போதும் பெண் ரசிகர்கள் இவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர்.

shah rukh khan bollywood

18 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கும் படங்களில் நடிக்கலாம் என்ற எண்ணத்துடன் மும்பையில் காலடி எடுத்து வைத்த ஷாரூக் கான், தொலைகாட்சித் தொடர்களில் நடித்து, இப்போது பாலிவுட் சினிமாவின் கிங் கான் ஆக உள்ளார். இவர் என்ன செய்கின்றாரோ அதுதான் பாலிவுட்டின் ட்ரெண்ட் செட்டிங் என்ற அளவிற்கு உச்சத்தில் உள்ளார். இவரது படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே, பாக்ஸ் ஆஃபீஸில் சர்வ சாதாரணமாக ரூபாய் ஆயிரம் கோடிகளை வசூல் செய்துவிடுகின்றது. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ஜவான் மற்றும் டாங்கி ஆகிய படங்கள் அசால்ட்டாக ரூபாய் ஆயிரம் கோடிகளை வசூல் செய்தது.

ஜவான்: இதில் ஜவான் படம் தமிழ்நாட்டினைச் சேர்ந்த இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவானது. மேலும் இந்தப் படத்தில் பெரும்பாலும் தென்னிந்திய கலைஞர்களே நடித்திருந்தனர். குறிப்பாக நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். படத்தின் கதை இதுவரை இந்தி சினிமா தொடாத, தொட பயந்த கதையாக இருந்ததால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜக வட இந்தியாவில் பெரும் சரிவினைச் சந்திக்க இந்தப் படமும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

shah rukh khan bollywood

மரணம்: 1990களில் இருந்து நடித்து வரும் ஷாரூக் கானுக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது அவருக்கு கொடுக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர். மேலும், லோகார்னோ யூடியூப் தளத்திற்கு அவர் சிறப்பு பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் பேசியது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது, "சாகும் நாள் வரை நான் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. படப்பிடிப்புத் தளத்திலேயே எனது உயிர் போகவேண்டும். ஒருவர் ஆக்‌ஷன் எனக் கூறவேண்டும். நடித்துக் கொண்டு இருக்கும்போதே நான் இறக்க வேண்டும். கட் சொல்லும்போது நான் எழுந்திருக்கக் கூடாது" எனக் கூறியுள்ளார்.

shah rukh khan bollywood

கிரிக்கெட்: ஷாரூக் கானின் இந்தப் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. பலருக்கு எமோஷ்னலையும் ஏற்படுத்தியுள்ளது. ஷாரூக் கான் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உடையவர். ஐபிஎல் தொடங்கியதில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி நடத்தி வருகின்றார். இந்த ஆண்டு கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.

shah rukh khan bollywood

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X