கலவரத்திற்கு காரணம் மோடி தான்.. தைரியமாக பேசிய நடிகர்.. மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா?

சென்னை: பாலிவுட் நடிகர் மூன்றாவது காதலியை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வச்சாலும், வச்சாரு அதை தொடர்ந்து சோசியல் மீடியாவில், அவரை பற்றிய செய்திகளை இணையவாசிகள் தேடி தேடி படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில், நரேந்திர மோடி பற்றி எப்போதோ பேசிய பழைய சர்ச்சைக்குரிய பேட்டி ஒன்று, இணையத்தில் வைரலாகி, தற்போது அவரை பிரச்சனையில் சிக்க வைத்துள்ளது.

பாலிவுட்டில் மிக முக்கியமான நடிகரான அமீர் கான், குயாமத் சே குயாமத் டக் என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் பின், பாசி, ராஜா இந்துஸ்தானி, இஸ்க் என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகர் என்ற அந்தத்தை பெற்றார். அவருக்கு 60வயது ஆன போதும், இவர் நடித்த பிகே, லகான், தங்கால் போன்ற பாக் ஆபிசில் வசூலை அள்ளின. அந்தப் படங்களை பார்க்க ஒரு கூட்டமே இருக்கு.

bollywood actor aamir khan old video trending on social media

மூன்றாவது காதலி: நடிகர் அமீர்கான் தனது 60வது பிறந்த நாளில், தனது மூன்றாவது காதலியான கெளரி ஸ்ப்ராட்டை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுமட்டுமில்லாமல், கௌரி தான் என் லைஃப் பார்ட்னர் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். வாழ்க்கையில் அமைதி இல்லாம இருந்த போது என் வாழ்க்கையில் வந்தவர் தான் கௌரி, அவரால், எனக்கு பல மடங்கு வயது குறைந்துவிட்டது. தற்போது நான் 18 வயது பையனைப்போல உணர்கிறேன் என்று கூறியிருந்தார்.

bollywood actor aamir khan old video trending on social media

மோடி தான் காரணம்: இந்நிலையில், நடிகர் அமீர்கான், பிரதமர் நரேந்திர மோடி குறித்து அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். இந்து முஸ்லிம் மற்றும் கிறுஸ்துவர் பிரச்சனை என்று பார்க்காமல், இதை இந்திய மக்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும். இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள், அதற்கு காரணமானவர்கள் மனிதத்திற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானவர்கள். இந்த கலவரத்திற்கு நரேந்திர மோடியும் அவரது கட்சியும்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று, எதைப்பற்றியும் பயப்படாமல் மிகவும் தைரியமாக அந்த பேட்டியில் பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், பலரும் அவரின் தைரியத்தை பாராட்டி இந்த வீடியோவை ரீ ஷேர் செய்து வருகின்றனர்.

குஜராத் கலவரம்: 2002 ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் ராமர் பிறந்த இடமான அயோத்திக்கு யாத்திரை சென்றனர். அவர்கள் ரயில் மூலமாக சென்று கொண்டிருந்த போது, கோத்ரா என்ற இடத்தில் ஒரு கும்பல் ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதில், 59 கரசேவகர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இது மாநிலம் முழுவதும் மதக் கலவரமாக மாறி, 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர். காட்டுத் தீ போல பரவிய இந்த கலவரம் வடக்கு அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா கிராமத்திற்கு பரவியது.இதில், 11 முஸ்லிம்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த சமயத்தில் குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X