Akshay kumar:தண்ணீருக்கு அடியில் ஒர்க் அவுட்... 56 வயதில் அசத்தும் நடிகர் அக்ஷய் குமார்!
சென்னை: பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமாரின் உடற்பயிற்சி வீடியோவைப் பார்த்து இந்த காலத்து இளசுகளும் வாயைப்பிளந்தனர்.
1991ல் சௌகான் திரைப்படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானார் அக்ஷய் குமார்.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மை கிலாடி து அனாரி மற்றும் மோஹ்ரா போன்ற திரைப்படங்களில் நடித்து மாஸ் ஹீரோ என பெயர் எடுத்தார்.

ஷங்கரின் 2.0 படத்தில்: நடிகர் அக்ஷய் குமார், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை கதாபாத்திரம் என நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 திரைப்படத்தில் பக்ஷிராஜாவா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஓஎம்ஜி 2: அக்ஷய் குமாரின் நடிப்பில் கடைசியாக ஓஎம்ஜி 2 படம் வெளியானது. பாலியல் கல்வி தொடர்பான இந்தப் படத்தில் இந்து கடவுள்களுக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி இந்த படத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தை திரையிடக்கூடாது என கூறி தியேட்டரில் அக்ஷய் குமாரின் உருவ பொம்மையை எரித்தனர்.

அடுத்தடுத்த படங்களில்: தற்போது நடிகர் அக்ஷய் குமார், மிஷன் ராணிகன்: தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ என்ற படம் அக்டோபர் வெளியாக உள்ளது. ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்க விபத்தை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ளது. இப்படத்தின் பெயரை நடிகர் அக்ஷய் குமார் மிஷன் ராணிகன்: தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நீச்சல் குளத்தில் ஒர்க் அவுட்: அக்ஷய் குமார் கடந்த வாரம் தனது 56 வது பிறந்த நாளை கொண்டாடி நிலையில், தற்போது இவர் நீச்சல் குளத்தில் தண்ணீருக்கு அடியில் படுத்தபடியும்,தண்ணீரில் மூழ்கி மூழ்கி உடற்பயிற்சி செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இந்த காலத்து இளம் ரசிகர்களையும் உச்சுகொட்ட வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் 56 வயதில் இப்படி ஒரு உடல் அமைப்பா என்று கேட்டு லைக்குகளை மலைபோல் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











