அமிதாப் பச்சன் மருத்துவமனையில் திடீர் அனுமதி... ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை.. பதற்றத்தில் ரசிகர்கள்!
மும்பை: பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

பாலிவுட் ஸ்டார்: அமிதாப் பச்சனுக்கு 81 வயதாகிவிட்ட போதிலும் எப்போதும் துடிப்புடனும், இளமையுடனே காணப்படுகிறார். பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார். 81 வயதான பிறகும், இன்னும் ஏராளமான விளம்பரங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார் அபிதாப்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: இந்நிலையில்,அமிதாப் பச்சனுக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஞ்சியோபிளாஸ்டி என்பது, இரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை ஆகும். மேலும், அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதயத்தில் செய்யப்படவில்லை என்றும் அவரின் கால்களில் சில இடங்களில் ரத்தக்கட்டுக்கள் இருக்கும் இடத்தில் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அவர் காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், தற்போது தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த படத்தில்: நடிகர் அமிதாப் பச்சன். கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி நடிக்கும் கல்கி 2898 AD படத்திலும், நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும், டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கிய வேட்டையன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். 33 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டையன் படத்தின் மூலம் ரஜியுடன் அபிதாப் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி ஆகியோரும் நடித்து வருகின்றனர். மேலும், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வரவிருக்கும் கன்னட படமான பட்டர்ஃபிளை படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளர். இப்படத்தில், பாருல் யாதவ் மற்றும் எல்லி அவ்ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











