என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்..மனம் உடைந்து பேசிய தீபிகா படுகோனின் கணவர்!

மும்பை : என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என்று தீபிகா படுகோனின் கணவர் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.

ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் பாஜா பாராத் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்

பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்கின் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் 83 திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரன்வீர் சிங். தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கிடைத்த வேலைகளை செய்தேன்

கிடைத்த வேலைகளை செய்தேன்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்வீர் சிங், ஒரு நடிகராக தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபங்களை கூறியுள்ளார். மும்பையில் நடைபெற்ற Marrakech சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ரன்வீர் சிங், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் திரைத்துறையில் நுழைந்தேன், அப்போது வருமானத்திற்காக கிடைத்த வேலைகளை செய்தேன்.

படுக்கைக்கு அழைத்தார்

படுக்கைக்கு அழைத்தார்

சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருந்து வருவது உண்மைதான். இது நடிகைகளுக்கு மட்டும் இல்லை நடிகர்களுக்கும் இருக்கு, அப்படி ஒரு அசிங்கமான ஓர் அனுபவத்தை நான் சந்தித்து இருக்கிறேன். ஒரு தயாரிப்பாளரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றேன் அப்போது அவர், நாயை கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்த்தார். அதே போல மற்றொரு நபர் இருட்டான இடத்திற்கு என்னை அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார்.

பல அவமானங்களை சந்தித்தேன்

பல அவமானங்களை சந்தித்தேன்

அது மட்டுமில்லாமல், அந்த நபர், நீங்கள் ஒரு கடின உழைப்பாளியா? இல்லை புத்திசாலித்தனமான தொழிலாளியா? என்று கேட்டார். அப்போது நான், ஒரு கடின உழைப்பாளி என்றேன். இதே போல பல அவமானங்களையும், அசிங்கங்களையும் நான் சந்தித்து இருக்கிறேன். பல விரும்பத்தகாத அனுபவங்கள் தான் என்னை ஒரு திறமையான நடிகராக ஆக்கி உங்கள் முன் நிற்கவைத்துள்ளது என்றார்.

நிர்வாண போட்டோஷூட்

நிர்வாண போட்டோஷூட்

நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், பத்திரிக்கை ஒன்றுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளப்பியதை அடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X