ஜூனியர் என்.டி.ஆரோட ஆடணும், மகேஷ்பாபுவோட நடிக்கணும்: இது பாலிவுட் ஹீரோயின்களின் ஆசை
மும்பை: பாலிவுட் ஹீரோயின்களுக்கு டோலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது.
தென்னிந்திய படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளது. இப்படி பாலிவுட் ஆசையால் கையில் இருந்த தென்னிந்திய பட மார்க்கெட்டை இழந்தவர்களும் உண்டு.
இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் சிலருக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் ஆசை வந்துள்ளது.

வித்யா பாலன்
நடிப்பில் பாலிவுட்டின் கான்களுக்கே சவால் விடும் வித்யா பாலனுக்கு பிடித்த தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா. இந்த வயதிலும் மனிதர் எப்படி சிக்கென்று இருக்கிறார் என்று வியக்கிறார் வித்யா.

சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட்டில் வெற்றி நாயகியாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு. மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர ஆசைப்படுகிறார் சோனா.

ஆலியா பட்
வாலிபர்களின் தூக்கம் கலைக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்டை தென்னிந்திய படங்களில் நடிக்க வைக்க ஆளாளுக்கு போட்டி போடுகிறார்கள். இந்நிலையில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறார்.

டான்ஸ்
ஜூனியர் என்.டி.ஆரின் டான்ஸ் தான் ஆலியாவை கவர்ந்துள்ளதாம். என்னமா ஆடுகிறார் அவருடன் சேர்ந்து ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஆலியா.


Click it and Unblock the Notifications











