Salman Khan: பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகர்.. 59 வயதிலும் முரட்டு சிங்கிள்!

சென்னை: பாலிவுட்டின் சினிமாவின் ஸ்டாரான சல்மான் கானின் 59வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பிறந்த நாளில் ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை கூறி இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். நடிகர் சல்மான் கான் 59 வயதாகியும் இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்தாலும், அவருடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரின் பிறந்த நாளான இன்று அந்த சர்ச்சை குறித்த தகவலும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

சங்கீதா பிஜ்லானி: நடிகர் சல்மான் கான் 80 கால கட்டத்தில் சங்கீதா பிஜ்லானியுடன் இணைந்து நடித்த போது, இருவரும் நெருக்கமாக பழகி காதலித்து வந்தனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென பிரிந்தனர். அவர்கள் பிரிந்த போதும், பல ஆண்டுகள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

salman khan birthday love

ஐஸ்வர்யா ராய்: உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் சல்மான் கான் பல படத்தில் சேர்ந்து நடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து இருவரும் பல இடத்தில் ஜோடியாக சுற்றித்திரிந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக்கூட செய்தி பரவியது. ஆனால், சல்மான் கான், ஐஸ்வர்யா ராயை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று தொடர்ந்து பிரச்சனை கொடுத்ததால் இருவரும் பிரிந்தனர்.

salman khan birthday love

கத்ரீனா கைஃப்: அதன் பிறகு சல்மான் கானும் கத்ரீனா கைஃப் காதலிப்பதாக பேசப்பட்டது. திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததாலும், பொது நிகழ்ச்சி, திருமண வரவேற்பு என பலவற்றுக்கும் இருவரும் ஜோடியாக சென்றதால் இருவர் குறித்தும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அந்த காதலும் கைகூடவில்லை. இருவரும் பிரிந்த போதும் கூட, தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

salman khan birthday love

Iulia Vantur: ரோமானிய தொலைக்காட்சி தொகுப்பாளினியான Iulia Vanturவை சல்மான் கான் காதலிப்பதாக செய்தி பரவியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் பரவியது. ஆனால், இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதையடுத்து திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.அதே போல, அமெரிக்க நடிகை சோமி அலி, சல்மான் கானுடன் பல ஆண்டுகள் உறவில் இருந்தார். அவர்கள் பிரிந்த போதிலும், சோமி அலி, தற்போதும் பேட்டிகளில் சல்மானின் மீதான காதல் குறித்து பேசி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X