ரஜினியை "மாஞ்சு மாஞ்சு" கௌரவிக்கும் பாலிவுட் நடிகர்கள்
மும்பை: பாலிவுட்காரர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரை தங்களின் படங்களில் பயன்படுத்துகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இதை பாலிவுட்காரர்கள் கவனிக்கத் தவறவில்லை. மேலும் ரஜினியின் பெயரை தங்களின் படங்களில் பயன்படுத்துவது, அவரை இம்பிரஸ் செய்ய ஏதாவது செய்ய நினைப்பது என்று ஜமாய்க்கிறார்கள்.
இந்த புதிய முறையை துவங்கி வைத்த புண்ணியம் ஷாருக்கானையே சேரும்.

ரா ஒன்
ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் ரஜினியை எந்திரன் கெட்டப்பில் நடிக்க வைத்தார் ஷாருக்கான். அவர் மனதில் ஒரு கணக்கை போட்டு தான் நடிக்க வைத்தார்.

லுங்கி டான்ஸ்
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் என்ற ஒன்றை வைத்து அதை ரஜினிகாந்துக்கு டெடிகேட் செய்தார் ஷாருக்கான்.

அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் தான் நடித்துள்ள என்டர்டெயின்மென்ட் படத்தில் ரஜினியின் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை என்று வசனம் பேசியுள்ளார்.

தலைவர்
பாலிவுட் நடிகர், நடிகைகள் ரஜினியை தலைவர், தலைவர் என்று கொண்டாடத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











