அஜித்தை வைத்து பக்கா பிளான் போட்டிருக்கும் ஸ்ரீதேவியின் கணவர்

By Siva

சென்னை: அஜித்தை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை தயாரிக்கப் போவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்ற அவரின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். ஹெச். வினோத் இயக்கும் இந்த படம் இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில் படம், ஸ்ரீதேவி, அஜித் பற்றி போனி கபூர் கூறியதாவது,

அஜித்

அஜித்

அஜித்தை எங்களுக்கு வெகு காலமாக தெரியும். ஷாலினி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். அஜித், ஷாலினியை நாங்கள் சில முறை சந்தித்து பேசியுள்ளோம். இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தின் தமிழ், தெலுங்கு பிரிவுகளில் கவுரவத் தோற்றத்தில் நடித்த ஒரு தென்னிந்திய நடிகரை தேடினோம். இது குறித்து அஜித்திடம் கூறியதற்கு அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். மேலும் தன் செலவில் மும்பைக்கு வந்து நடித்துக் கொடுத்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

அந்த நேரத்தில் தமிழ் படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று நானும், ஸ்ரீயும் விரும்பினோம். ஸ்ரீ தமிழ் திரையுலகம் மூலம் தான் தனது கெரியரை துவங்கினார். அவர் புகழ் பெற்ற தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் பண்ண நினைத்தோம். என்னுடைய முதல் படமான ஹம் பான்ச் தென்னிந்திய படத்தின் ரீமேக் ஆகும். நான் பாக்யராஜின் பல படங்களை ரீமேக் செய்துள்ளேன். அனில் மணிரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அஜித்துடனான எங்கள் உறவு அற்புதமானது.

இயக்குனர்கள்

இயக்குனர்கள்

தமிழ் படம் எடுக்க வேண்டும் என்று பேசியபோது நம் தயாரிப்பில் அஜித் நடிக்க வேண்டும் என்றார் ஸ்ரீ. இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்கு பிறகு நாங்கள் சந்தித்து பேசினோம். அஜித் பரிந்துரை செய்த சில இயக்குனர்களை நான் சந்தித்தேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பொழுது தான் அவர் பிங்க் படத்தை ஏன் ரீமேக் செய்யக் கூடாது என்று கேட்டார். அஜித் சொன்னதை கேட்டு ஸ்ரீக்கு மகிழ்ச்சி.

தல ஐடியா

தல ஐடியா

அஜித்தால் பிங்க் படத்தை சிறப்பாக கொண்டு வர முடியும் என்று ஸ்ரீ நம்பினார். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இது ஸ்ரீதேவியின் கனவு நினைவாகும் நேரம். அஜித் ஸ்ரீ மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அவர் ஸ்ரீயின் கனவுகளை நிறைவேற்றி வைக்கிறார். நாங்கள் தொடர்ந்து இரண்டு படங்களில் பணியாற்ற உள்ளோம். பிங்க் ரீமேக் மார்ச் அல்லது ஏப்ரலில் முடிந்து மே மாதம் ரிலீஸாகும். அதன் பிறகு அடுத்த படத்தை ஜூலையில் துவங்கி 2020ம் ஆண்டு ரிலீஸ் செய்கிறோம்.

வினோத்

வினோத்

வினோத் மிகவும் திறமையானவர். நாங்கள் பிங்க் படத்தை ரீமேக் செய்ய நினைப்பதற்கு முன்பே அஜித் வினோத்தை என்னை சந்திக்குமாறு கூறினார். அவரும் மும்பை வந்து என்னை சந்தித்து ஒரு ஐடியா கொடுத்தார். அஜித்தும், வினோத்தும் சேர்ந்து என் வேலையை குறைத்துவிட்டனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன் கவுரவத் தோற்றத்தில் நடிக்கவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப படத்தில் சில மாற்றங்களை செய்கிறார் வினோத் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X