நான் ஒரு நடிகன் என்பதையே மறந்துட்டாங்களோ... ‘கொலைவெறி’யோடு போராடும் தனுஷ்
திருவனந்தபுரம்: தனுஷ் நடித்த படங்களில் பிரபலமான பாடல்கள் பல உள்ளன. அதேபோல், தனுஷ் பாடிய பாடல்களிலும் புகழ் பெற்ற பாடல்கள் பல உள்ளன. ஆனபோதும், ரசிகர்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பது 'ஒய் திஸ் கொலை வெறி' பாடல் தானாம்.
பெரும்பாலும் தனுஷ் பங்குபெறும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் ரசிகர்களின் முக்கிய வேண்டுகோள் கொலைவெறி பாடல் தானாம்.
இதனால் தன்னை ஒரு நடிகன் என்பதையே மறந்து பாடகனாக்கி விடுவார்களோ என தெரிவித்துள்ளார் தனுஷ்.

3....
தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ‘3' படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற பாடல் தான் ‘ஒய் திஸ் கொலைவெறிடி' பாடல்.

குறையாத மவுசு...
படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அப்பாடலுக்கு ரசிகர்களிடையே மவுசு குறைந்தபாடில்லை.

மொழி தாண்டி ஹிட்....
இப்பாடல் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப் பட்டு ஹிட்டடித்தது. இப்பாடலைப் பாடிய தனுஷிற்கு பிரதமர் மன்மோகன் சிங்கே நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து விருந்தளித்தது குறிப்பிடத்தக்கது.

நேயர் விருப்பம்....
இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் தனுஷ். அப்போது, விழாவிற்கு வந்திருந்த ரசிகர்கள் தனுஷை கொலைவெறி பாடச் சொல்லி கட்டாயப் படுத்தினார்களாம்.

பாட முடியவில்லை...
தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி எவ்வளவோ மறுத்த போதும், ரசிகர்கள் விடுவதாக இல்லையாம். தொடர்ந்து விழாக்களில் பாடிப் பாடி தனுஷிற்கு கொலைவெறிப் பாடலே வெறுத்துப் போய் விட்டதாம்.

கொலைவெறி வேண்டுகோள்....
இது குறித்து அவர் ரசிகர்களிடம் கூறுகையில், ‘நான் நினைக்கிறேன் ரசிகர்கள் நான் ஒரு நடிகன் என்பதையே மறந்து விட்டார்கள் என. நான் எங்கே சென்றாலும் என்னை முதலில் இரண்டு வரி ஒய் திஸ் கொலைவெறி பாடாமல் விட மாட்டேன் என்கிறார்கள்.

சலித்து விட்டது....
இப்பாடலுக்கு ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளித்தாலும், இப்பாடலைப் பாடிப் பாடி எனக்குத் தான் அலுத்து விட்டது' என்றார்.


Click it and Unblock the Notifications











