twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேடாதீர்கள்! உயர்நீதிமன்றம் கண்டனம்!

    ரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேடாதீகள்! உயர்நீதிமன்றம் கண்டனம்!

    |

    Recommended Video

    உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் பெயரை வைத்து விளம்பரம் தேட கண்டனம்!- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள நடிகர். இப்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

    Bothra case against Rajinikanth dismissed!

    பிரபல சினிமா பைனான்சியரான முகுந்த்சந்த் போத்ரா 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்தின் சம்மந்தியுமான கஸ்தூரிராஜா ரூ.65 லட்சம் கடன் பெற்றதாகவும், அதை திருப்பி செலுத்துவதாக ரஜினிகாந்த் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இதுதொடர்பாக பேசிய ரஜினிகாந்த், போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்ததை எதிர்த்து போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜாராகததால் அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

    ரூ.65 லட்சம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சட்டத்தை தனக்கு சாதகமாகவும், தவறாகவும் பயன்படுத்தும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதி என்.சதிஷ்குமார் தெரிவித்தார். மேலும், சமுதாயத்தில் நல்ல செல்வாக்கில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

    ரஜினிகாந்த் போன்று பிரபலமாக இருப்பவர்களை வழக்கில் இழுத்தால், ஊடக வெளிச்சம் கிடைத்து எளிதில் பிரபலமடையலாம் எனவும், விளம்பரத்திற்காகவும் போத்ரா இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகக் கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    English summary
    Financiar Bothra filed a case against Rajinikanth in lending money to Kasthuri Raja. High court verdict out on this. The intention of this case and petition was to seek publicity by using the name of Rajinikanth and hence case was dismissed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X