விஜய் சேதுபதிக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது.. பாய்ஸ் மணிகண்டன் எமோஷனல்

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மணிகண்டன். சிறப்பாகவே படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். இந்தச் சூழலில் அந்தப் படத்துக்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் திடீரென காணாமல் போனார். இப்போது விஜய் சேதுபதி நடித்திருக்கும் மகாராஜா படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி குறித்து கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் ஷங்கர். அவரது இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற படம் வெளியானது. யூத்ஃபுல் சப்ஜெக்ட்டோடும், தனது வழக்கமான பிரமாண்டத்தோடும் படத்தை உருவாக்கியிருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் ஷங்கர் இளைய கலாசாரத்தை கெடுக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன. ஆனால் இந்தப் படம் இன்றுவரை பலரிடம் கனெக்ட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Vijay Sethpathi Maharaja

மணிகண்டன்: இதில் நடித்துதான் ஜெனிலியா, பரத், சித்தார்த், நகுல், தமன் உள்ளிட்டோரெல்லாம் பயங்கர ஃபேமஸ் ஆனார்கள். அவர்களில் மணிகண்டனும் ஒருவர். படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர்; படத்தின் திருப்புமுனைக்கும் முக்கிய காரணங்களில் ஒருவராக இருப்பார். அந்தப் படத்தின் மூலம் நல்ல பெயரையும் பெற்றார். அதன் பிறகு கிச்சா வயசு 16, யுகா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கிச்சா வயசு 16 படத்தில் சிம்ரனும் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ எண்ட்ரி: சில காலங்களிலேயே தமிழ் சினிமாவிலிருந்து மணிகண்டன் ஓரங்கட்டப்பட்டார். ஏன் அவருக்கு இந்த சறுக்கல் என்று யாருக்கும் புரியவில்லை. இப்போது அவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் மகாராஜா படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் படம் வெளியாகி மெகா ஹிட்டாகியிருக்கிறது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார் மணிகண்டன். அவரது நடிப்புக்கும் உச்சக்கட்டமாக வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மணிகண்டன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து பாய்ஸ் மணிகண்டன் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பாய்ஸ் படத்தில் நான் நடித்த கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதியும் ஃபோட்டோ அனுப்பினார். பிறகு அவர் நடிக்கவில்லை. அதேபோல் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான். ஆனால் அது நடக்கவில்லை.

சூதுகவ்வும்: மேலும் சூதுகவ்வும் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரில் நடிக்க வேண்டியதும் நானே. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இப்படி விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டியதிருந்தது. ஆனால் நடிக்க முடியாமல் போனது. இருந்தாலும் மகாராஜா படத்தில் அது நிறைவேறி இருக்கிறது. இது ஒரு மேஜிக் போலவே எனக்கு தெரிகிறது. இதிலிருந்தே அவருக்கும் எனக்கும் ஒரு பிணைப்பு இருப்பதாகவே தோன்றுகிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X