Ajithkumar: 4 மணி நேரம் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை? பரபரப்பு தகவல்!
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால்,இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கோடான கோடி ரசிகர்களை கொண்ட அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா, ஆரவ், ரெஜினா, ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது இப்படத்தின் படப்பிடிப்பு துனுஷியாவில் நடைபெற்று வந்தது. ஆனால் வானிலை காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின் தொடங்கப்பட்டது

மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில், நடிகர் அஜித், சென்னை, அப்பலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. அங்கு அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது தெரியவந்ததாகவும், இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அஜித் குமாருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மணி நேரம் அறுவை சிகிச்சை: இந்த அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதன் நம்பகத்தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. இப்படி அஜித்தின் உடல் நிலைகுறித்து நேற்றில் இருந்து இணையத்தில் செய்தி பரவிக்கொண்டு இருக்கும் போது, அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ்சந்திரா இதுகுறித்து அமைதியாக இருப்பது அஜித் ரசிகர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











