'நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்'... உதயநிதி எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் உதயநிதியின் அடுத்தப் படத்தை மகிழ் திருமேணி இயக்குகிறார்.

சென்னை: நடிகர் உதயநிதியின் அடுத்தப் படத்தை மகிழ் திருமேணி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தொடங்கியது உதயநிதியின் சினிமா பயணம். தற்போது அவர் முழுநேர அரசியல்வாதியாகப் போகிறார் என செய்தி அடிபடுகிறது. அதற்கு ஏற்றார் போல் திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகிவிட்டார்.

அந்த பதவி உதயநிதிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. விரைவில் அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் இனி அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றே பேசப்படுகிறது.

புதிய படம்

புதிய படம்

இது ஒருபுறம் இருக்க உதயநிதியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதியின் அடுத்தப் படத்தை, பிரபல இயக்குனர் மகிழ் திருமேணி இயக்க உள்ளார் என்பதே அது.

இயக்குனர் மகிழ் திருமேணி

இயக்குனர் மகிழ் திருமேணி

தடையறதாக்க, மீகாமன், தடம் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் மகிழ் திருமேணி. அத்துடன் தமிழ் சினிமாவில் தற்போது த்ரில்லர் படங்களின் காலம். வாரத்திற்கு இரண்டு த்ரில்லர் படங்கள் ரிலீசாகின்றன. அதனால் தான் தனது அடுத்தப் படம் த்ரில்லர் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மகிழ் திருமேணியுடன் கைக்கோர்க்கிறார் உதயநிதி.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்த கண்ணே கலைமானே படம் சரியாக ஓடவில்லை. இதனால் அப்செட்டில் இருக்கிறார் உதய். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிக்கும் சைக்கோ படமும் வழக்கு பிரச்சினையில் சிக்கி இருக்கிறது.

உதயநிதி உறுதி

உதயநிதி உறுதி

இதனால் தனது அடுத்தப் படம் எப்படியும் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் உதயநிதி. அதன் காரணமாகவே மகிழ் திருமேணியிடம் கதை கேட்டு, ஓகே செய்திருக்கிறார்.

வித்தியாசமான தோற்றம்

வித்தியாசமான தோற்றம்

மகிழ் திருமேணி படங்களில் த்ரில்லரிங்கான திரைக்கதை இடம்பெறுவதோடு, ஆக்ஷனும், ரொமான்சும் தூக்கலாக இருக்கும். எனவே உதயநிதியை இந்த படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X