ஹீரோவாக நடிக்கும் பிரபல பிரியாணி கடை ஓனர்... எடப்பாடிக்கும் இவருக்கும் அப்படி ஒரு தொடர்பு!

சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன் ஹீரோவாக நடிக்கிறார்.

சென்னை: சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன், வேலு பிரபாகரன் இயக்கும் கடவுள் 2 படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஒரு காதல் கதை, கடவுள் ஆகிய படங்களை இயக்கிய வேலு பிரபாகரன் அடுத்து இயக்கும் படம் கடவுள் 2. இது 20 வருடங்களுக்கு முன்பு வெளியான கடவுள் படத்தின் இரண்டாம் பாகமாகும்.

இப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார் சேலம் ஆர்ஆர் பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன். தான் ஏன் நடிக்க வந்தேன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது,

"நான் மிகவும் அடிமட்டத்தில் இருந்து தனி ஆளாக உழைத்து இந்த உயரத்தை அடைந்திருக்கிறேன். பொருளாதார ரீதியாக நான் நிறைவாக இருக்கிறேன். அதனால் தான் மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்க வந்திருக்கிறேன்.

Briyani shop owner is hero now

இந்த படத்தை பொறுத்த வரை நான் ஒரு அரசியல் வாதியாக நடிக்கிறேன். கதைப்படி சினிமா நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரும் போது நாம் ஏன் நடிக்கக் கூடாது என நினைத்து, நான் சினிமாவில் நடிக்கிறேன். அதற்கான காட்சியை தான் இப்போது எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த படத்தில் நான் டான்ஸ் எல்லாம் ஆடியிருக்கிறேன். எனது குடும்பக்கு அது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் நடன இயக்குனர் ராதிகா எளிமையான ஸ்டெப் அமைத்து என்னை ஆட வைத்துவிட்டார்.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், இயக்குனர்கள் சீமான், பேரரசு உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். இது ஒரு சமூக அரசியல் விழிப்புணர்வு படமாக இருக்கும். எனக்கும் இயக்குனர் வேலு பிரபாகரனுக்கும் கொள்ளை ரீதியாக நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த படத்தில் சர்சை காட்சிகள் எதுவும் இருக்காது", என அவர் கூறினார்.

அப்புறம், இவருக்கும் எடப்பாடிக்கும் என்ன தொடர்பு என்றால், சேலம் மாவட்டம் எடப்பாடி தான் தமிழ்செல்வனுடைய சொந்த ஊர். வேறொன்னும் இல்லைங்க...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X