புத்தம், சரணம், கச்சாமி: அஜீத்தின் புதிய பாதை

நடிகர் அஜீத் குமார் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர் என்பது பலரும் அறிந்த விஷயம். இந்நிலையில் அவர் தற்போது புத்த மத கொள்கைள் அடங்கிய புத்தகத்தை படித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சாந்தமாகியுள்ள அஜீத் தற்போது மேலும் சாந்தம் ஆகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் போலும்.
அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவாவுடன் அவர் சேரும் புதிய படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது.
நான் கடவுள், அங்காடி தெரு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய ஜெயமோகன் தான் சிவாவின் படத்திற்கும் வசனம் எழுதுகிறார். அதனால் இந்த படத்தில் வரும் வசனங்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜீத் குமார் ஆன்மீகத்தில் மூழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications