அப்பா அமிதாப் மாதிரி பெரிய ஸ்டாராக வாய்ப்பே இல்லை: அபிஷேக் பச்சன்
மும்பை: அப்பா போன்று பெரிய ஸ்டாராக முடியாது என்று அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
சுமார் 180 படங்களில் நடித்துள்ளார் அமிதாப் பச்சன். இன்னும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் டிவி நிகழ்ச்சிகள் நடத்துவது, விளம்பர படங்களில் நடிப்பது என்று 71 வயதிலும் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் தனது தந்தை பற்றி அபிஷேக் பச்சன் கூறுகையில்,

சூரியன்
ஒருவர் தனது எல்லைக்குள் இருக்க வேண்டும். ஒருவர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல நினைக்க வேண்டும். சூரியனை அடைவதை மறந்துவிடுங்கள். அது நடக்காத காரியம். அமிதாப் மிகப் பெரிய நடிகராக இருந்தார், இருக்கிறார், என்றென்றும் இருப்பார். அதனால் அவர் போன்று ஆக நினைக்க வேண்டாம். அது நடக்காது என்றார் அபிஷேக்.

அமிதாப்
படம் சரி இல்லை என்றால் மிஸ்டர் அமிதாப் பச்சன் நடித்தால் கூட அது ஓடாது. படத்தின் கதை சரியில்லை என்றால் அதை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் படங்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று அபிஷேக் தெரிவித்தார்.

அப்பா மாதிரி
அப்பா போன்று நான் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். படங்களில் வேலை செய்யாமல் ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. என் தந்தையின் வயதிலும் நான் படங்களில் நடித்துக் கொண்டிருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என்று நம்புகிறேன் என்றார் அபிஷேக் பச்சன்.

பா
பா படத்திற்கு பிறகு நானும், அப்பாவும் சேர்ந்து பணியாற்றவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து பன்ட்டி அவர் பப்லி, சர்க்கார், சர்க்கார் ராஜ், கபி அல்விதா நா கெஹ்னா மற்றும் பா ஆகிய படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம் என்று அபிஷேக் கூறினார்.

சூப்பர் ஸ்டார்கள்
சூப்பர்ஸ்டார்களுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது. அது வேலையில் அவர்கள் காட்டும் ஈடுபாடு மற்றும் பணிவு தான். செட்டுக்கு வெளியே அவர்கள் பெரிய ஸ்டார்கள். ஆனால் வேலை செய்யும்போது அவர்கள் ஸ்டார்கள் கிடையாது. செட்களில் அவர்கள் தங்கள் படங்கள் சிறப்பாக வர கடினமாக உழைக்கின்றனர் என்று அபிஷேக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











