ஹீரோ .. ஹீரோ ..
விஜயகாந்த்தின் அரசியல் வாழ்க்கைக்கு அடிக்கல் நாட்டப் போகும் படம் என்று வர்ணிக்கப்பட்டதென்னவன் பெரும் அடியைச் சந்தித்திருப்பதால், விஜயகாந்த் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
அரசியலில் களம் புக முடிவு செய்து விட்ட விஜயகாந்த், அதற்குத் தேவையான நடவடிக்கைகளில்படிப்படியாக இறங்கியுள்ளார். அவர் நடித்து வந்த தென்னவன் படத்தில் அதிரடி வசனங்களைப்புகுத்தியும், அரசு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் நடத்தியும், அதிகஎதிர்பார்ப்புடன் தென்னவனை களம் இறக்கினார்.
ஆனால் தமிழகம் முழுவதிலும் தென்னவன் படத்திற்குக் கிடைத்து வரும் ரிசல்ட் விஜயகாந்த்வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. படத்திற்கு பெருமளவில் வரவேற்பு இல்லை என்பதுஒருபுறம் இருக்க, ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படம் திருப்தியைக் கொடுக்கவிலலை என்றுகூறப்படுகிறதாம்.
இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள விஜயகாந்த்தை, படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள்அணுகி, படம் கையை கடித்து விட்டது, ஏதாவது செய்யுங்களேன் என்று கூற கோபத்தில் கத்திவிட்டாராம் கேப்டன். ரஜினி போல என்னை நினைக்க வேண்டாம். அவருக்கு எதிர்காலம் போய்விட்டது. ஆனால் நான் அப்படி அல்ல, தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்கவுள்ளேன். எனவேஅவர் பாபா பட நஷ்டத்திற்காக பணத்தைத் திருப்பிக் கொடுத்தது போல நானும் கொடுப்பேன் எனநினைக்க வேண்டாம். அடுத்த படத்தில் உங்களது நஷ்டத்தை சரிக் கட்டுகிறேன் என்று கட் அன்ட்ரைட்டாக கூறி விட்டாராம்.
தென்னவன் தோல்வியால், விஜயகாந்த் துவண்டு போகவில்லை என்றாலும் கூட, அவரது அரசியல்பிரவேசம் இதனால் தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











