தமிழகத்தில் ஓய்ந்து கேரளாவில் பிரச்சனையான சர்கார்: விஜய் மீது வழக்கு

By Siva

Recommended Video

சர்கார் படத்திற்கு பிரச்சினை மேல் பிரச்சினை- வீடியோ

திருச்சூர்: திருச்சூரில் சர்கார் படம் தொடர்பாக விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சர்கார் பட போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் போஸை பார்த்து தமிழக சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

பின்னர் படம் வெளியான போது விஜய் தம்மடித்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை.

போஸ்டர்

போஸ்டர்

திருச்சூரில் சர்கார் படம் ஓடும் ராம்தாஸ் தியேட்டரில் விஜய் தம்மடிக்கும் போஸ்டர்களை வைத்தனர். புகைப்பிடிக்கும் போஸ்டர்களை பொது இடங்களில் வைக்க சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ராம்தாஸ் தியேட்டரில் விஜய் புகைப்பிடிக்கும் போஸ்டர்களை வைத்தது திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

சர்கார் போஸ்டர் தொடர்பாக திருச்சூர் மாவட்ட மருத்துவ அதிகாரி விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த போஸ்டர்கள் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராம்தாஸ் தியேட்டரில் இருந்து சர்கார் பட போஸ்டர்களை சுகாதாரத் துறை பறிமுதல் செய்துள்ளது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

சர்கார் விவகாரம் தொடர்பாக மாவட்ட மருத்துவ அதிகாரியான டாக்டர் ரீனா கூறியதாவது, சிகரெட், புகையிலை பொருட்களை பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வினியோகஸ்தர், அந்த போஸ்டர்களை பிரிண்ட் செய்த ரசிகர் மன்றம் மற்றும் தியேட்டர் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது போன்ற போஸ்டர்களால் மக்களுக்கு தேவையில்லாத பழக்கங்கள் மீது கவனம் செல்லும் என்றார்.

பிரச்சனை

பிரச்சனை

தமிழகத்தில் புகைப்பிடிக்கும் காட்சிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக இலவச மிக்சி, கிரைண்டரை எரித்த காட்சிக்கு தான் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி அந்த காட்சியை நீக்க வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X