twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதிக்கு கொள்ளுப்பேத்திகளே வந்தும்கூட சாதிகள் ஒழியவில்லையே! - கமல் வேதனை

    By Shankar
    |

    Caste system still prevails in the country - Kamal Hassan
    சென்னை: சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியாரின் கொள்ளுப் பேத்திகூட பிறந்துவிட்டார்கள். ஆனால் நாட்டில் சாதிகள் ஒழியவில்லையே என்றார் வேதனையுடன் கமல்ஹாஸன்.

    இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமலிடம், இந்தியா குடியரசாகி 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாடு தன்னிறைவு அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?, என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த கமல், "அந்த நிலையை அடைந்துவிட்டதற்கான ஆதாரமும் இருக்கிறது. அடையவில்லை என்பதற்கான அடையாளமும் இருக்கிறது. முழுவெற்றி பெறவில்லை.

    குறிப்பாக சாதி முறை இன்னும் ஒழியவில்லையே. சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதியாரின் பாப்பாக்களுக்கும் கொள்ளு பேத்தி வந்து விட்டார்கள் என்றாலும் சாதி ஒழியவில்லை. சாதி வெறி ரத்தம் இன்னும் வடிந்து கொண்டுதான் இருக்கிறது.

    கே: எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

    ப: இங்கு இருக்கும் எல்லோருமே அரசியல்வாதிகள்தான். ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுப்போடுகிறோம். கை விரலை கரையாக்கி கொள்கிறோம். அந்த கரைபோதும்.

    கே: சுயசரிதை எழுதுவீர்களா?

    ப: எனக்கு அதில் உடன்பாடு இல்லை. சுயசரிதையில் பொய்தான் எழுத வேண்டி வரும். உண்மை எழுதினால் பலரது மனம்தான் காயப்படும். என் மீது உங்களுக்கு என்னென்ன சந்தேகங்கள் இருக்கின்றனவோ.. அவை அப்படியே தொடரட்டும்!, என்றார்.

    English summary
    Kamal Hassan says that even after 65 years of Republic status, Caste system is prevailing in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X