கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் 'சிசிவி'யில் இறக்கிய சிம்பு #CCV

By Siva

சென்னை: தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் செக்கச் சிவந்த வானம் படத்தில் இறக்கியிருக்கிறார் சிம்பு.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் அது பற்றி நல்லவிதமாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அஅஅ

அஅஅ

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு சிம்பு நடித்த படம் செக்கச் சிவந்த வானம். அஅஅ படத்தில் நடித்தபோது சிம்பு படப்பிடிப்புக்கு வராமல் இயக்குனர், தயாரிப்பாளரை கதறவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. டப்பிங் பேச கூட வராமல் தனது வீட்டு பாத்ரூமில் இருந்து பேசி அனுப்பினார் என்று தெரிவிக்கப்பட்டது.

திருத்தம்

திருத்தம்

அஅஅ இயக்குனரை கதற விட்ட பிறகு சிம்பு ஒரேயடியாக மாறிவிட்டார். மணிரத்னத்திடம் தனது சேட்டையை எல்லாம் காட்டாமல் அவர் சொன்னபடியே நடித்துக் கொடுத்தார் என்று கூறப்பட்டது. என்னத்த பெருசா நடிச்சிருக்கப் போகிறார் என்று விமர்சித்தவர்கள் கூட இன்று படத்தை பார்த்துவிட்டு அடடே சிம்பு அசத்திவிட்டாரே என்று பாராட்டியுள்ளார்கள்.

அமைதி

அமைதி

அஅஅ விவகாரம் தொடர்பாக பலரும் சிம்புவை கடுமையாக விமர்சித்தார்கள். சிம்புவின் கெரியர் இத்துடன் முடிந்துவிட்டது. அவரின் சினிமா வாழ்க்கைக்கு அவரே சங்கு ஊதிவிட்டார் என்றெல்லாம் கூறினார்கள். இதை எல்லாம் கேட்ட சிம்பு பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததன் அர்த்தம் அப்போ புரியவில்லை இப்போ புரிகிறது.

பதில்

பதில்

தன்னை விமர்சித்தவர்களுக்கு செக்கச் சிவந்த வானம் படம் மூலம் பதில் அளித்துள்ளார் சிம்பு. படத்தை பார்ப்பவர்களால் அவரின் சிறப்பான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எஸ்டிஆர் தாறுமாறு என்கிறார்கள். சிம்பு ரசிகர்கள் தவிர்த்து பிற ரசிகர்களுக்கு அவரின் நடிப்பு பிடித்துள்ளது. இருப்பினும் அஅஅ பட நஷ்ட விவகாரம் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X