twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையில் 43 ஆண்டுகளை கடந்த புரட்சித்தமிழன் சத்யராஜ்... கொண்டாடும் திரையுலகம்

    |

    சென்னை : புரட்சித் தமிழன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சத்யராஜ்.

    இவர் திரைத்துறையில் கால்பதித்து 43 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    கடந்த 1978ல் இவரது நடிப்பில் சட்டம் என் கையில் படம் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்ட நடிகர் சிபி சத்யராஜ் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்ட நடிகர் சிபி சத்யராஜ்

    புரட்சித் தமிழன்

    புரட்சித் தமிழன்

    நடிகர் சத்யராஜ் புரட்சித் தமிழன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். தன்னுடைய வில்லன், கதாநாயகன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கடந்த 1978ல் வெளியான சட்டம் என் கையில் படத்தின் மூலம் இவர் திரைத்துறையில் நுழைந்தார்.

    ஹீரோவாக மாற்றம்

    ஹீரோவாக மாற்றம்

    தொடர்ந்து தன்னை வில்லனாக அறிமுகப்படுத்திக் கொண்டு கமல், ரஜினி என அனைவரையும் மிரட்டினார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னை ஹீரோவாக நிலைநிறுத்தி சிறப்பான படங்களில் நடித்துள்ளார். வேதம் புதிது, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

    காமெடியில் அதகளம்

    காமெடியில் அதகளம்

    தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலும் நடித்து சிறப்பான ஹீரோவாகவும் வலம்வந்தார். காமெடியிலும் அதகளம் செய்தார். அந்த வகையில் நடிகன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. வில்லாதி வில்லன் படம் மூலம் தன்னை இயக்குநராகவும் நிலைநிறுத்தினார்.

    சிறப்பான கட்டப்பா கதாபாத்திரம்

    சிறப்பான கட்டப்பா கதாபாத்திரம்

    ஒரு கட்டத்தில் கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்தினார். அந்த வகையில், நண்பன், தலைவா, ராஜா ராணி, இசை உள்ளிட்ட படங்கள் இவரது கேரியரில் சிறப்பாக அமைந்தன. பாகுபலியில் இவர் நடித்த கட்டப்பா என்ற கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

    மகன் நடிப்பில் தயாரிப்பு

    மகன் நடிப்பில் தயாரிப்பு

    மேலும் படங்களையும் இவர் தயாரித்துள்ளார். லீ, நாய்கள் ஜாக்கிரதை மற்றும் சத்யா ஆகிய படங்களை இவர் தயாரித்துள்ளார். இவை இவரது மகன் சிபி சத்யராஜின் நடிப்பில் வெளிவந்த படங்கள். இந்த படங்கள் சிபிக்கு நல்ல பெயரை கொடுத்ததுடன் வசூல் ரீதியாகவும் சத்யராஜிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளன.

    சிபி சத்யராஜ் பாராட்டு

    சிபி சத்யராஜ் பாராட்டு

    இந்நிலையில் திரைத்துறையில் கால்பதித்து தற்போது இவர் 43 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து இவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சிபி சத்யராஜூம் தனது தந்தையின் இந்த பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    English summary
    Sathya raj completes his 43 years in Cine field as an Actor
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X