ஹேப்பி பர்த் டே ஹீரோ...பிரபுவிற்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக வாரிசான பிரபு, இளைய திலகம் என அனைவராலும் பாராட்டப்பட்டார். நடிகர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல முகங்களைக் கொண்ட பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தற்போது ஹீரோ ஆகி விட்டார்.
பிரபு இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகன் விக்ரம் பிரபு, பிரபுவுடன் நடித்த நடிகைகளான ராதிகா, மீனா உள்ளிட்ட பலரும், ரசிகர்களும் பிரபுவிற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டு கால பயணம்
1982 ம் ஆண்டு சங்கிலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் பிரபு. கடந்த 40 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, சப்போர்டிங் ரோல் என பல ரோல்களிலும் நடித்து, மக்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் போன்ற மெகா பட்ஜெட் படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

செகண்ட் ஹீரோவாக வெற்றி
பிரபு ஹீரோவாக நடித்த சின்னதம்பி,ராஜகுமாரன் உள்ளிட்ட பல படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதே போல் ரஜினி, கமல், அஜித், சத்யராஜ், கார்த்திக், விக்ரம், ஜெயம் ரவி, விஷால் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்த குரு சிஷ்யன், வெற்றிவிழா, தர்மத்தின் தலைவன், அக்னி நட்சத்திரம், சந்திரமுகி, ராவணன், உனக்கும் எனக்கும், பில்லா போன்ற பல படங்கள் மாஸ்டர் பிளாஸ்டர் படங்களாக அமைந்துள்ளன.

பிற மொழிகளிலும் ஹிட்
மோகன்லால் உள்ளிட்ட பிற மொழி டாப் ஹீரோக்களுடன் இணைந்து பிரபு நடித்த பல படங்களும் செம ஹிட் ஆகி உள்ளன. கன்னடத்தில் லேட்டஸ்டாக த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.
Recommended Video

ஸ்லிம்மான பிரபு
சமீபத்தில் தனது குண்டான தோற்றத்தை மாற்றி, அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து, செம ஸ்மார்ட்டாக மாறி உள்ளார். இதனால் சின்னதம்பி 2 படம் எடுக்கப் போகிறார்களா, அதற்காக தான் பிரபு உடல் எடையை குறைத்துள்ளாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











