ஹேப்பி பர்த்டே இச்சாக்கா.. மலையாள சினிமாவின் மார்கண்டேயர் மம்மூட்டி.. பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: நடிகர் மட்மூட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலிஷ் என பல மொழிகளிலும் தடம் பதித்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

மலையாளத்தில் 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாலிச்சக்கல் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மம்மூட்டி. இந்த படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்தார்.

முதல் முறையாக லீடிங் ரோல்

முதல் முறையாக லீடிங் ரோல்

அதன் பிறகு காலச்சக்கரம் என்ற படத்தில் நடித்தார் நடிகர் மம்மூட்டி. இந்த படத்திலும் சிறிய கதாப்பாத்திரத்திலேயே நடித்தார் மம்மூட்டி. நடிகர் மம்மூட்டி தேவலோகம் என்ற படத்தில் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார். ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

மம்மூட்டி 70வது பிறந்த நாள்

மம்மூட்டி 70வது பிறந்த நாள்

இதனை தொடர்ந்து மேலா என்ற டிராமா படத்தில் லீட் ரோல்களில் ஒருவராக நடித்தார். இந்த படம் மம்மூட்டியின் மூன்றாவது படமாக கிரெடிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் மம்மூட்டி. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் மம்மூட்டி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மலையாள சினிமாவின் மார்கண்டேயர்

மலையாள சினிமாவின் மார்கண்டேயர்

மலையாள சினிமாவின் மார்கண்டேயர் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டிக்கு மலையாள சினிமா மட்டுமின்றி பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மோகன் லால் முதல் நடிகை குஷ்பு வரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

மோகன் லால் வீடியோ வாழ்த்து

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகன் லால் நடிகர் மம்மூட்டிக்கு வீடியோ வெளிடயிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹேப்பி பர்த்டே டியர் இச்சாக்கா என குறிப்பிட்டு ஷேர் செய்துள்ள வீடியோவில் நடிகர் மம்மூட்டிக்கு வாழ்க்கையில் தொழிலில் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் நீண்ட ஆயுளுடன் அனைத்து செல்வங்களையும் பெற தனது குடும்பத்துடன் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

நிகரற்ற பவர் ஹவுஸ்

நிகரற்ற பவர் ஹவுஸ்

நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ள டிவிட்டில் அன்புள்ள மம்மூக்கா.. ஸ்க்ரீனில் உங்களின் நிகரற்ற பவர் ஹவுஸ் மூலம் தலைமுறைகளை ஊக்குவித்ததற்கு நன்றி.

உங்களுக்கு ஏராளமான மகிழ்ச்சி.. அமைதி.. கிடைக்கட்டும்.. உங்கள் பிறந்தநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

நடிகை மஞ்சு வாரியர்

நடிகை மஞ்சு வாரியர்

இதேபோல் பாடகி சித்ரா, நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய சினிமாவின் லெஜன்ட்

இந்திய சினிமாவின் லெஜன்ட்

பிரபல மலையாள நடிகரான நிவின் பாலியும் நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் இந்திய சினிமாவின் லெஜன்ட் என்னுடைய இன்ஸ்பைரேஷன்... டியர் மம்மூக்காவுக்கு என்னுடைய பிறந்த நாள் என பதிவிட்டுள்ளார்.

ரகசியத்தை சொல்லுங்கள்

ரகசியத்தை சொல்லுங்கள்

இதேபோல் நடிகை குஷ்புவும் நடிகர் மம்மூட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டியரஸ்ட் மம்மூக்காவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்.. சூப்பர் ஃபன் பெறுங்கள்.. மேலும் உங்களுடைய சூப்பர் டூப்பர் குட் லுக்குக்கான ரகசியத்தையும் தயவு செய்து பகிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Recommended Video

South Celebrity Then and Now Photoshop Looks | Surya, Ajith, Dulquer Salaman - Shameem Lukman
இந்திய சினிமாவின் ஐகான்

இந்திய சினிமாவின் ஐகான்

இதேபோல் நடிகர் சரத்குமாரும் நடிகர் மம்மூட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் என் அன்பு நண்பர், இந்திய சினிமாவின் வெர்சைட்டில் ஐகான்.. மம்மூக்காவுக்கு மிகவும் மகிழ்ச்சியான 70 வது பிறந்தநாள். 5 தசாப்தங்கள்.. இன்னும் பல வருடங்களுக்கு மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்க வேண்டும்.. நீங்கள் எப்போதும் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X