சிபிராஜூக்கு இன்று பிறந்தநாள் .. குவியும் வாழ்த்துக்கள்!
சென்னை : நாய்கள் ஜாக்கிரதை, சத்யா, கட்டப்பாவ காணோம் என தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்கள் மனதில் நம்பிக்கைக்குரிய நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிபிராஜ் சத்யராஜ்.
நடிகர் சத்யராஜின் மகனான இவர் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீப காலமாகவே இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்கள் அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜோராக ஓடியது
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் தமிழில் சக்கைப்போடு போட்ட நிலையில் இந்த திரைப்படம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படு ஜோராக ஓடியது.

அதிக பார்வையாளர்களை
வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு நாயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் சமீபத்தில் டிஆர்பியில் அதிக பார்வையாளர்களை கொண்டு முன்னணியில் இருந்தது.

காமெடி திரைப்படங்களில்
சிபிராஜ் தமிழ் சினிமாவுக்கு ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதைத் தொடர்ந்து தனது அப்பாவான சத்யராஜ் உடன் இணைந்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் என தொடர் காமெடி திரைப்படங்களில் கலக்கி வர மக்களுக்கு மிகவும் பரிச்சயமாக ஆனார்.

மாறுபட்ட நடிப்பை
அதைத்தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சிபிராஜ் "லீ " என்ற திரைப்படத்தில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினார்.

பெயரையும் புகழையும்
இவ்வாறு அவர் தேர்ந்தெடுத்த நாய்கள் ஜாக்கிரதை, நாணயம், போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சிறந்த கதாநாயகன் என பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

சிறந்த கதைகளை
இந்நிலையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டுமென்றால் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என தீர்மானித்த சிபிராஜ் அதைத் தொடர்ந்து அதிரடியாக கதைத் தேர்வில் இறங்கி சத்யா, கட்டப்பாவ காணோம், வால்டர் என சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பிறந்தநாள்
மாயோன், ரங்கா, வட்டம், கபடதாரி என அடுத்தடுத்து திரைப்படங்களில் சிபிராஜ் மிகத் தீவிரமாக நடித்துக்கொண்டு வரும் நிலையில் அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











