ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் விஜய் எந்த சூழ்நிலையிலும் அரசியலுக்கு வரமாட்டார். ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் என இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ். ஏசந்திரசேகரன் தெரிவித்தார்.

திருப்பூரில் ஏழைகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய்மற்றும் அவரது தந்தை எஸ். ஏ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது:

நடிகர்கள் அரசியலில் தலை காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் யாருக்கும் இருந்ததில்லை. விஜய் எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும்அரசியலில் தலைகாட்ட மாட்டார். எனவே அவரது ரசிகர்கள் பயப்பட வேண்டியதில்லை. அதிர்ச்சியும் அடைய வேண்டியதில்லை. ஒரு நடிகன் என்றமுறையில் அரசியல், மதம், சாதி அடிப்படைகளுக்கு நாங்கள் அடிமையாகி விட மாட்டோம்.

பிறப்பால் கிறிஸ்தவர் என்றாலும், வீட்டை வெளியே வரும்போது மதச் சட்டையைக் கழற்றி விட்டு மனிதன் என்ற சட்டையைப் போட்டுக் கொண்டுதான் வருகிறோம். எங்களுக்கு மனிதர்களாக உள்ள எல்லோரும் தேவை. மனிதர்களாக உள்ள அத்தனை பேரையும் நாங்கள் மதிக்கத் தயாராகஉள்ளோம். எனவே அரசியலில் நுழைய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார் எஸ்.ஏ சந்திரசேகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X