»   »  மம்முட்டிக்கு மஞ்சு!

மம்முட்டிக்கு மஞ்சு!

Subscribe to Oneindia Tamil


சென்னையில் படிக்கும் மலையாளத்துப் பேரழகி மஞ்சு, மம்முட்டிக்கு ஜோடியாக செளர்யம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

ரெஞ்சி பணிக்கர் இயக்கும் படம் தான் செளர்யம். அதிரடி, ஆக்ஷன் காட்சிள் நிறைந்த இப்படத்தில், கேரளாவின் சமீபத்திய அரசியலை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளாம்.

சாய்குமார், லாலு அலெக்ஸ், விஜயராகவன், ராஜன் பி.தேவ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். மம்முட்டி, போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். படம் நவம்பர் 29ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்முட்டிக்கு இதில் ஜோடியாக நடித்திருப்பவர் மஞ்சு. அழகுப் பெண் மஞ்சு தற்போது வாசம் புரிவது சிங்காரச் சென்னையில். ஆனால் இந்த அருமைப் பெண்ணின் பூர்வீகமோ கேரள தேசம்.

மம்முட்டியின் மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளார் மஞ்சு. எத்திராஜ் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற மஞ்சு, மம்முட்டியுடன் ஜோடி போட்டது சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார்.

தற்போது சென்னை தரமணியில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாராம் மஞ்சு.

ஒரு குடும்ப நண்பர் மூலம் மஞ்சு குறித்து பணிக்கருக்குத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வலை வீசி மஞ்சுவைப் பிடித்துப் போட்டு படத்தை முடித்து விட்டார்.

மம்முட்டியுடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்தபோது மஞ்சுவின் நெஞ்சு பூராவும் சந்தோஷமாகி விட்டதாம். மஞ்சுவின் பெற்றோரும் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஓ.கே. சொல்லி விட்டார்களாம்.

இன்னொரு மேட்டர், மம்முட்டி போலீஸ் ஆபிசராக வேடம் போடுவது இது 25வது முறையாம்!

Read more about: chennai, manju, souryam
Please Wait while comments are loading...