நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா… வடிவேலுவுக்கு சேரன் பிறந்தநாள் வாழ்த்து !

சென்னை : காமெடி கிங் வைகை புயல் வடிவேலு இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Recommended Video

பாட்டு பாடிய வடிவேலு VaigaiPuyal Vadivelu Ultimate fun speech | Lyca Productions

அவருக்கு நடிகரும் இயக்குனருமான சேரன், வெற்றிக்கொடி கட்டு பட நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தி பிறந்த நாள் வாழ்த்து கூறியுளளார்.

அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

காமெடி கிங்

காமெடி கிங்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவைக் கலைஞர்கள் இருந்தாலும், தனது தனிப் பாணியில் நகைச்சுவை விருந்து படைத்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் வைகைபுயல் வடிவேலு. தோற்றத்தையும் உடல்மொழியையும் சிறப்பாக நகைச்சுவைக்குப் பயன்படுத்துவதில் வடிவேலுக்கு ஈடு இணை இல்லை. தலைமுடி, மீசை என அனைத்தும் அவருடைய நகைச்சுவையில் பங்களிக்கும். மீசை இல்லாமல் ஒட்டுமீசை வைத்துக்கொள்வதையும் பென்சிலால் மீசை வரைந்து கொள்வதையும் வைத்துக்கூட ரசிக்கத்தக்க நகைச்சுவைகளை கொடுத்து இருக்கிறார் வடிவேலு.

சிரிப்பு வெடி

சிரிப்பு வெடி

நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்து வகையிலும் ரசிகர்களை வெடித்துச் சிரிக்க வைப்பார். உடலை நடிப்புக்குப் பயன்படுத்துவதில் எந்த நட்சத்திர நடிகருக்கும் விருதுகளை வாரிக் குவித்த நடிகருக்கும் சளைத்தவரல்ல வடிவேலு. வடிவேலுவின் முகம், அவரின் பாடி லாங்குவேஜை வைத்து எந்த மீம்ஸ் போட்டாலும் அது டாப்பு டக்கராக கச்சிதமாகி விருகிறது. குறிப்பாக சொல்லப்போனால், நேசமணி மீம்ஸ் உலக அளவில் டிரெண்ட் அடித்தது

Why Blood Same Blood

Why Blood Same Blood

அதேபோல, மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நனைச்சுவை விருந்து படைத்திருப்பார். இந்த படத்தில் இடம் பெற்ற Why Blood Same Blood காமெடியை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. இந்தபடத்தில் வரும் ஒவ்வொரு நகைச்சுவை காட்சியிலும் சிரித்து சிரித்து வயிறு வலித்திருக்கும். இப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், Why Blood Same Blood இன்னும் பிரபலமாகவே உள்ளது.

சேரன் வாழ்த்து

சேரன் வாழ்த்து

இன்று 61வது பிறந்த நாளை கொண்டாடும் வடிவேலுவுக்கு இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் 'கிங்' என்று வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தை நினைவு கூர்ந்து வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மீண்டும் வடிவேலு

மீண்டும் வடிவேலு

அரசியல் ஈடுபாடு, தயாரிப்பாளருடன் ஏற்பட்ட உரசல் போன்ற காரணங்களால், திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X