சினிமாவிலிருந்து விலகுகிறாரா அஜித்குமார்?.. அதான் இப்படி பண்ணுறாரோ?.. பிரபலம் சொன்ன சீக்ரெட்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அடுத்ததாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

ajith vidaamuyarchi good bad ugly

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.

மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அஜர்பைஜான் நாட்டில் வைத்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. அங்கு பெரும்பாலான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின.

செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். இதற்கிடையே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் அஜித் நடிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு பாலு பேட்டி: மேலும் அஜித் இப்போது மீண்டும் கார் ரேஸிலும், பைக் ட்ரைவிங்கிலும் தனது கவனத்தை முழுதாக செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சினிமாவை விட்டு விலகப்போவதாக அஜித் இன்னும் அறிவிக்கவில்லை. விஜய் அரசியலுக்கு போன பிறகு இவரைத்தாண்டி வேறு ஒருவருடன் போட்டிப்போட வேண்டுமா என்ற மனநிலைக்கு அஜித் வந்ததால் கார் ரேஸுக்கு போய்ட்டாரோ என்று தோன்றுகிறது.

ஐரோப்பாவில் செட்டில்: இன்னொரு பக்கம் விடாமுயற்சி சரியாக முடியவில்லை. மறுபக்கம் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்து ஸ்பெயினுக்கு படக்குழு செல்லவிருக்கிறது. இப்படி இருக்கும்போது, 2025 ஃபார்முலா 2 கார் பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகிறார் என்றும் தெரிகிறது. அதற்கான ரிக்சர்சல்தான் துபாயில் பயிற்சி எடுத்தது. முதலில் சிங்கப்பூரில் சில வருடங்களுக்கு முன்பே செட்டில் ஆகிவிட வேண்டும் என்று எண்ணத்தில் இருந்தார். ஆனால் இப்போது அது மாறிவிட்டது. இப்போது ஐரோப்பா நாடுகளில் குடும்பத்துடன் செட்டில் ஆக அஜித் ஆர்வம் காட்டிவருகிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X