சிம்பு செம க்யூட் ப்பா.. சின்ன வயதில் தம்பி, தங்கையுடன் தீபாவளி கொண்டாட்டத்தை பாருங்க.. வேற லெவல்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி கண்ணும் கருத்துமாக நடித்துவருகிறார். அவர் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் சிறு வயதில் தனது தம்பி, தங்கையுடன் அவர் தீபாவளி கொண்டாடிய க்யூட் ஃபோட்டோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கோலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று கணிக்கப்பட்ட சிம்பு இடையில் சில விஷயங்களால் முழு கவனத்தை சினிமாவில் செலுத்த முடியாமல் திணறினார். இதன் காரணமாக உடல் எடை கூடிய அவர்; நடிப்பதற்கும், நடப்பதற்குமே கஷ்டப்பட்டார். ஒருவழியாக அனைத்து எண்ணங்களையும் ஒழுங்குப்படுத்தி உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.
வின்டேஜ் சிம்பு: தனது இரண்டாவது இன்னிங்ஸில் படு பிஸியாக நடித்துவருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹிட் படங்களில் நடித்த வருக்கு பத்து தல, தக் லைஃப் ஆகிய இரண்டு படங்களும் சறுக்கலை கொடுத்தன. இருந்தாலும் அவரது நடிப்புக்கு பக்கா மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படி வின்டேஜ் சிம்புவாக அவர் மாறி வந்திருப்பதை பார்த்து திரைத்துறையே ஆச்சரியத்தில்தான் இருக்கிறது.

எஸ்டிஆரின் லைன் அப்: சிம்புவின் லைன் அப்பை பொறுத்தவரை சூப்பராக அமைந்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன், அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் படம் என மும்முரமாக நடித்துவருகிறார். கண்டிப்பாக இந்த படங்கள் எல்லாமே அவருக்கு பெரிய மைல் கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. அதுவும் வெற்றிமாறன் இயக்கத்தில் கமிட்டாகியிருக்கும் அரசன் படத்துக்குத்தான் ஓவர் ஹைப்.
என்ன கதை?: இந்தக் கூட்டணி வடசென்னை படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அப்போது நடக்கவில்லை. இப்போது இணைந்திருக்கும் அரசன் படமும் வடசென்னை யுனிவர்ஸில்தான் உருவாகிறது. மறைந்த ரவுடி மயிலை சிவாவின் வாழ்க்கை வரலாறைத்தான் இந்தப் படத்தில் எடுப்பதாக கூறப்படுகிறது. தனுஷுக்கு எப்படி ஒரு வடசென்னையோ சிம்புவுக்கு இந்தப் படத்தை எதிர்பார்க்கலாம்.
ட்ரெண்டாகும் ஃபோட்டோ: இந்நிலையில் சிம்பு தொடர்பான புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சின்ன வயதில் அவர் தனது தம்பி குறளரசன், தங்கை இலக்கியா ஆகியோருடன் வீட்டில் தீபாவளி கொண்டாடிய படம்தான் அது. அதில் மூன்று பேரும் கம்பி மத்தாப்பை கையில் பிடித்திருக்க தனது தம்பி குறளரசன் ஒழுங்காக அதை பிடித்திருக்கிறாரா என்று கூர்ந்து கவனிக்கிறார் எஸ்டிஆர். வழக்கம்போல் அந்தப் புகைப்படத்திலும் சிம்புதான் செம க்யூட்டாக இருக்கிறார். முன்னதாக சிம்புவின் தங்கை இலக்கியா திருமணமாகி செட்டிலாகிவிட்டார். சகோதரர் குறளரசனை பொறுத்தவரை இது நம்ம ஆளு படத்துக்கு இசையமைத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











