»   »  சல்மான் கான் ஏன் "ஜூ ஜூ"ன்னு கிடக்கிறார் தெரியுமா?

சல்மான் கான் ஏன் "ஜூ ஜூ"ன்னு கிடக்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் டியூப்லைட் படத்தின் நாயகி சீனாவை சேர்ந்த ஜூ ஜூ என்பது தெரிய வந்துள்ளது.

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த பஜ்ரங்கி பாய்ஜான் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் சிறுமி ஹர்ஷாலி மல்ஹோத்ரா வாய் பேச முடியாதவராக நடித்து அனைவரும் அவரை பற்றியே பேச வைத்துவிட்டார்.

இந்நிலையில் தான் கபீர் கான், சல்மான் கான் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

டியூப்லைட்

டியூப்லைட்

சல்மான் கானின் புதுப்படம் துவங்கும் போது எல்லாம் தீபிகா படுகோனேவிடம் தான் கால்ஷீட் கேட்பார்கள். அம்மணி உப்பு இல்லை, புளி இல்லை என்று சப்பை காரணங்களை கூறி நடிக்க மறுப்பார். இம்முறை கபீர் தீபிகாவை நடிக்க வைக்க விரும்பியபோது அவர் வேண்டாம் என சல்மானே கூறிவிட்டார்.

சீன கதை

சீன கதை

1962ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்து எடுக்கும் படத்தில் தீபிகா எதற்கு, சீன நடிகையாக பார்த்து ஒப்பந்தம் செய்யுங்கள் என சல்மான் கபீரிடம் தெரிவித்துள்ளார்.

ஜூ ஜூ

ஜூ ஜூ

கபீர் கானின் டியூப்லைட் படத்தில் ஜூ ஜூ என்ற சீன நடிகையை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பையும் துவங்கிவிட்டனர். ஜூ ஜூ வாட் வுமன் வான்ட், ஷாங்காய் காலிங் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

புகைப்படம்

டியூப்லைட் படத்தின் படப்பிடிப்பு தற்போது லடாக்கில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை ஜூ ஜூ ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

English summary
Chinese actress Zhu Zhu is Bollywood Sultan Salman Khan's heroine in Tubelight being directed by Kabir Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil