அமிதாப் சொன்னதால் முடிவை மாத்திக்கிட்டேன்... மீண்டும் நடிக்கிறேன்! - சிரஞ்சீவி

By Shankar

Amitabh Bachchan with Chiranjeevi
ஹைதராபாத்: சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும், மீண்டும் நடிக்கப் போவதாகவும் நடிகர் சிரஞ்சீவி அறிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் இணையற்ற நடிகராகத் திகழ்பவர் சிரஞ்சீவி. இப்போது அரசியலில் பரபரப்பாகிவிட்டார். இதுவரை 149 படங்களில் நடித்துள்ள அவர், 150வது படத்தை கடந்த ஆண்டு அறிவித்தார்.

ஆனால் திடீரென, இரு தினங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மக்கள் என்னை நிஜத்திலும் முதல்வராகப் பார்க்க விரும்புவதால், அரசியல் பணிகளை கவனிக்கிறேன் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாதில், அமிதாப் நடித்த புத்தா - ஹோகா தேரா பாப் படத்தின் பிரிமியர் காட்சி பிரசாத் மல்டிப்ளெக்ஸில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அமிதாப் பச்சன், ராம்கோபால் வர்மா உள்பட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன், "சிரஞ்சீவி சினிமாவிருந்து ஓய்வு பெறக் கூடாது. அவர் நடிக்க வேண்டும். அவரது அடுத்த படத்தில் நான் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்," என்றார்.

உடனே மைக் பிடித்த சிரஞ்சீவி, "அமிதாப்ஜி சொன்னதற்காக எனது முடிவை மாற்றிக் கொள்கிறேன். நிச்சயம் நான் 150வது படத்தை நடிக்கிறேன். அதை பூரி ஜெகன்னாத் இயக்குவார்" என அறிவிக்க, அரங்கம் அதிர்ந்தது கைதட்டலில்.

அடுத்து பேசிய இயக்குநர் ராம் கோபால் வர்மா, சிரஞ்சீவி தொடர்ந்து நடித்தால், அவரது 151வது படத்தை நானே இயக்குகிறேன் என்றார்.

சிரஞ்சீவியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, சிரஞ்சீவியின் 150 வது படத்தை அவரது மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார். பூரி ஜெகன்னாத் இயக்குகிறார். ராம்சரணை சிறுத்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் பூரி ஜெகன்னாத் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X