twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்த நாளைக் கொண்டாட குடும்பத்தினருடன் நேபாளம் போன சிரஞ்சீவி

    By Mayura Akilan
    |

    ஹைதராபாத்: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி. 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

    சிரஞ்சீவியின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கை சென்னையில்தான் ஆரம்பமானது. அவர் சென்னையில் உள்ள திரைப்படக்கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பயின்றார்.

    ரஜினியுடன் வில்லன்

    ரஜினியுடன் வில்லன்

    தமிழில் ரஜினியுடன் 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும், பாலச்சந்தர் இயக்கத்தில் '47 நாட்கள்' படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதன் பின் தெலுங்கில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். சிரஞ்சீவி நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழிலும் வெற்றி பெற்றன.

    150 வது திரைப்படம்

    150 வது திரைப்படம்

    சிரஞ்சீவி பல்வேறு சினிமா விருதுகளும் வாங்கியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்துள்ள சிரஞ்சீவி, பிறந்த நாளான இன்று அவருடைய 150வது படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    ரசிகர்களுக்கு விருந்து

    ரசிகர்களுக்கு விருந்து

    சிரஞ்சீவியின் 150வது படத்திற்கான கதை இன்னும் முடிவாகாததால் அறிவிப்பு தாமதமாக வெளியிடப்படலாம் என்றும் கூறுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்க வருவதால் அவருடைய ரசிகர்களை முற்றிலும் திருப்திப்படுத்தும் விதமாக மட்டுமே இருக்கும் என்கிறார்கள்.

    நேபாளத்தில் பிறந்தநாள்

    நேபாளத்தில் பிறந்தநாள்

    எனவே இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சிரஞ்சீவி குடும்பத்தாருடன் நேபாளத்திற்கு சென்றுள்ளார்.

    மகன் கொண்டாட்டம்

    மகன் கொண்டாட்டம்

    அதனால் சிரஞ்சீவியின் பிறந்த நாளை அவருடைய மகனும் நடிகருமான ராம் சரண் ஹைதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் விமரிசையாக கொண்டாடினார்.

    நகைச்சுவைத் திரைப்படம்

    நகைச்சுவைத் திரைப்படம்

    சிரஞ்சீவி நடிக்கப் போகும் அவருடைய 150-வது படம் கலகலப்பான நகைச்சுவை கலந்த ஆக்சன் படமாக இருக்கும் என தெலுங்கு திரை உலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Chiranjeevi, who was conspicuous by his absence at his birthday celebrations today in Hyderabad, is reportedly in Nepal to spend some time with his family. He's expected to visit the famous Pashupatinath temple in Nepal and also undergo spa-rejuvenation therapy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X