அச்சச்சோ.. சிரஞ்சீவிக்கு என்ன ஆச்சு.. பேரக்குழந்தைகளை கொஞ்ச வேண்டிய நேரத்தில் இப்படியா?

சென்னை: மெகா ஸ்டார் சீரஞ்சிவி தனது கையில் ஸ்லிங் அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் பதறிப்போய் அவருக்கு என்ன ஆச்சு என தொடர்ந்து இணையத்தில் கேட்டு வந்தனர். இதையடுத்து, நடிகர் சிரஞ்சீவி தனது ரசிகர்களுக்காக தனது உடல் நலம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்க்ததில், சமீபத்தில் தோள்பட்டையில் சிறிய "கீஹோல்" (keyhole) அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். இது பெரிய பிரச்சனை இல்லை என்றும், தற்போது, நான் நன்றாக குணமடைந்து தினசரி பணிகளை தொடங்கிவிட்டேன் என பதிவிட்டுள்ளார். மேலும், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் நிதின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சையை மிக சுலபமாகவும், சுகமாகவும் செய்ததற்கு நன்றி கூறி உள்ளார். ரசிகர்களின் அன்பு, அக்கறை, கவலை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Chiranjeevi health surgery
Photo Credit:

இரட்டை குழந்தை: இதற்கிடையில், சிரஞ்சிவியின் மகன் ராம் சரண் மற்றும் Upasana Konidela தம்பதியருக்கு ஜனவரி 31ந் தேதி ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு சிவா ராம் கோனிடேலா மற்றும் அன்வீரா தேவி கோனிடேலா என்று பெயர் வைத்துள்ளதாக சிரஞ்சீவி அறிவித்தார். சிவா ராம் என்ற பெயர் ஆன்மீக வலிமையும் நற்பண்பும் ஒன்றாக சேர்வதை குறிக்கிறது. அன்வீரா தேவி என்ற பெயர் தைரியம், அருள் மற்றும் தெய்வீக சக்தியை குறிக்கிறது. இதையடுத்து பெயர் சூட்டுவிழாவில் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டு இருந்தார்.

கவலையில் ரசிகர்கள்: சுருக்கமாக சொன்னால், சிரஞ்சீவிக்கு சிறிய அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளார். அதே நேரத்தில், அவரது குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் அனைவரும் இருக்கின்றனர்.சிறிய அறுவை சிகிச்சை தான் என சிரஞ்சீவி சொன்னாலும் அவரது ரசிகர்கள், பேரக்குழந்தைகளை கொஞ்ச வேண்டிய நேரத்தில் இப்படியா? என்றும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சிரஞ்சீவியின் தீவிர ரசிகர்கள் அவர் உடல்நிலை குறித்து கவலையுடன் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X