Chiranjeevi Net Worth: 69 வயசாகுது.. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு!

ஹைதராபாத்: மெகா ஸ்டார் என ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் சிரஞ்சீவி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிரஞ்சீவியின் சகோதரர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தெலுங்கு திரையுலகை ஆஸ்கர் வரை கொண்டு சென்று பெருமைப்படுத்தியவராக உள்ளார்.

கொனிடேலா எனும் பெரிய குடும்பத்தை சேர்ந்த சிரஞ்சீவி இன்று பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வம்பரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியானது.

Chiranjeevi Chiranjeevi birthday net worth

சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆடம்பர வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம் வாங்க..

69 வயசு: ரஜினிகாந்த், கமல்ஹாசன், மம்மூட்டி உள்ளிட்ட நடிகர் 70 வயதை கடந்தும் நெருங்கியும் விட்டனர். அவர்களுடன் போட்டி போட்டு நடித்து வந்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பிறந்த சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

விஸ்வம்பரா ஃபர்ஸ்ட் லுக்: இயக்குநர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விஸ்வம்பரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. கையில் சூலத்துடன் சிரஞ்சீவி நிற்கும் பவர்ஃபுல்லான போஸ்டர் வெளியானது. திரிஷா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், மீனாட்சி சவுத்ரி என பல நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.

Chiranjeevi Chiranjeevi birthday net worth

சொகுசு வீடு மற்றும் கார்கள்: இந்திய சினிமாவின் முக்கிய நடிகரான சிரஞ்சீவி, ரூ.11 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம், ரூ.90 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர், ரூ.1.50 கோடி மதிப்புள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கூடுதலாக, அவர் ரூ.2.75 கோடி விலையில் Mercedes-Benz G63 AMG உள்ளிட்ட சொகுசு கார்களை வைத்திருக்கிறார். ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 25 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான பங்களாவை வைத்திருக்கிறார். அதன் விலை மட்டும் 30 கோடி ரூபாயாம்.

குடும்ப உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை: சிரஞ்சீவி நடிகர் ராமலிங்கய்யாவின் சகோதரி சுரேகாவை 1980ம் ஆண்டு மணந்தார். இந்த தம்பதியருக்கு ராம் சரண், ஸ்ரீஜா, சுஷ்மிதா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். ராம் சரண் தனது தந்தையின் வழியைப் பின்பற்றி தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

Chiranjeevi Chiranjeevi birthday net worth

சொத்து மதிப்பு: மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒரு படத்துக்கு 60 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சியை ஆர்மபித்து சொதப்பினாலும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சிரஞ்சீவியிடம் அதிகபட்சமாக 1650 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக கூறுகின்றனர். அவரது மகன் ராம்சரணிடம் தனியாக 1100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மருமகள் உபாசனா காமினேனியின் சொத்துக்கள் தனிக்கதை. டோலிவுட்டில் பெரிய குடும்பமாக இருக்கும் சிரஞ்சீவியின் தம்பி தற்போது ஆந்திராவையே துணை முதல்வராக இருந்து ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 4 முறை நந்தி விருதுகளையும் 9 முறை பிலிம்ஃபேர் விருதுகளையும் வாங்கிய இவருக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X