Box Office: சிரஞ்சீவியா?.. பிரபாஸா?.. டோலிவுட்டில் சங்கராந்தி வின்னர் யாரு.. சந்தோஷத்தில் நயன்தாரா!

ஹைதராபாத்: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான தி ராஜாசாப் படத்தை விட ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள படமாக சிரஞ்சீவியின் 'மன சங்கர வரபிரசாத் காரு' படம் மாறியுள்ளது. இந்த சங்கராந்தி வின்னர் சிரஞ்சீவி தான் என்றும் பாஸ் இஸ் பேக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த ஹாரர் காமெடி படத்தில் அவரது முகம் கூட சரியாக இல்லை என்றும் படத்தின் முதல் பாதி முழுவதும் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் உள்ளிட்ட நடிகைகளின் ஓவர் கிளாமரை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளனர்.

Chiranjeevi vs Prabhas Who is the real winner for this Sankaranti 2026
Photo Credit:

2ம் பாதியில் காட்டப்படும் பேய் வீட்டு கதை மற்றும் அந்த பாட்டியின் ராஜா காலத்து கதை அப்படியே அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தில் இருந்து காப்பியடித்தது என கலாய்த்து வருகின்றனர்.

தெலுங்கு விஸ்வாசம்: அதே நேரத்தில் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் அப்படியே அஜித் குமார், நயன்தாரா நடித்த விஸ்வாசம் படத்தை பட்டி டிக்கெரிங் பார்த்து எடுக்கப்பட்ட படம் என்றும் ட்ரோல்கள் குவிந்தாலும், படமாக பார்க்கும் போது, குடும்பத்தோடு பார்த்து கொண்டாடக்கூடிய படமாக உள்ளதாக ரசிகர்கள் அந்த படத்தை ஹிட் ஆக்கியுள்ளனர்.

தி ராஜாசாப் வசூல்: பிரபாஸ் முதலை எல்லாம் பிடித்து சண்டை போடும் தி ராஜாசாப் திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியானது. அந்த படம் இதுவரை 4 நாட்களில் 180 கோடி வசூல் மட்டுமே உலகளவில் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கணித்துள்ளனர். ஆனால், 200 கோடி வசூலை கடந்து விட்டதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் படத்தின் பட்ஜெட் மட்டுமே 350 கோடி முதல் 400 கோடி என்கின்றனர். பிரபாஸுக்கு 100 கோடி சம்பளம் கொடுத்த நிலையில், படத்தின் பட்ஜெட் உச்சத்துக்கு சென்று விட்டதாக கூறுகின்றனர்.

மன சங்கர வரபிரசாத் காரு வசூல்: பகவந்த் கேசரி படத்தை இயக்கிய அனில் ரவிப்புடி கடந்த ஆண்டும் வெங்கடேஷ் படத்தை பொங்கலுக்கு வெளியிட்டு கேம் சேஞ்சர் படத்தை விட அதிக வசூலை அள்ளி பாக்ஸ் ஆபீஸ் வெற்றிக் கண்டார். இந்நிலையில், இந்த ஆண்டும் சங்கராந்தி வின்னர் அவர் தான் என்று கூறுகின்றனர். முதல் நாளில் 84 கோடி வசூல் ஈட்டிய மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் 2வது நாளில் உலகளவில் சுமார் 130 கோடி வசூலை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் முழுவதும் அந்த படம் ஓடினால் அதிகபட்சமாக 300 கோடி வசூலை தொடும் என்றும் சிரஞ்சீவி மற்றும் நயன்தாராவுக்கு இது பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X