மாவீரன் இயக்குநர் இயக்கத்தில் விக்ரம்.. பரவும் வதந்திகள்.. உண்மை நிலை என்ன?
சென்னை: சியான் விக்ரம் அடுத்ததாக மண்டேலா, மாவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், திடீரென சினிமா வட்டாரத்தில், அந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது வெறும் வதந்தி தான் என நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், கமல்ஹாசனை போல நடிப்புத் திறமை மிக்க நடிகர்களாக விக்ரம் மற்றும் சூர்யா இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் அவர்களால் பெரிதாக ஷைன் ஆக முடியவில்லை. சியான் விக்ரம் நடிப்பில் வெளியான படங்களிலேயே கடைசியாக அவருக்கு பிளாக்பஸ்டர் படம் என்றால் அது அந்நியன் தான் என்கின்றனர்.

அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த பெரிய படங்களான கந்தசாமி, ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, பத்து என்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான், மகான், கோப்ரா, தங்கலான் இந்த ஆண்டு வெளியான வீர தீர சூரன் என பல படங்கள் சியான் விக்ரம் கஷ்டப்பட்டு நடித்தாலும், அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என்கின்றனர்.
ஆரம்பத்திலும் தோல்வி: சினிமாவில் சியான் விக்ரம் அறிமுகமான போதே பல தோல்விகளை சந்தித்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தோல்வியை தழுவி வந்த நிலையில், பாலா இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான சேது படம் தான் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்திற்கு பிறகு சியான் விக்ரம் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க விஜய், அஜித்துக்கே டஃப் கொடுத்தார்.

தொடர்ந்து வெற்றி: சேது, தில், காசி, ஜெமினி, தூள், சாமி, பிதாமகன் என அடுத்தடுத்த படங்கள் மூலம் வெற்றியை கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார். கமர்ஷியல் ஹீரோவாகும் முயற்சியில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு ஒரு படம் என நடித்து வந்தார். அந்நியன் படத்திற்கு பிறகு வெளியான மஜா, பீமா, கந்தசாமி, ராவணன் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை நடத்தாத நிலையில், தெய்வ திருமகள் திரைப்படம் அவரது நடிப்பை ரொம்பவே ரசிக்க வைத்தது. ஆனால், அதற்கு பிறகும் பெரிய வெற்றிப் படங்கள் சியான் விக்ரமுக்கு அமையவில்லை என்பது தான் மிகப்பெரிய வருத்தம். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படங்களில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்தினார். அந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவில்லையா?: இந்த ஆண்டு அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் சிறப்பான சம்பவமாக இருந்த நிலையிலும், அந்த படம் ரிலீஸ் ஆகும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக வசூல் ரீதியாக அடிவாங்கியது. 100 கோடி வசூல் கூட சியான் விக்ரமால் ஈட்ட முடியவில்லை. இந்நிலையில், அடுத்ததாக அவர் மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதை விவாதத்தில் இருவருக்கும் செட்டாகாத நிலையில், அந்த படத்தில் இருந்து வெளியேறுகிறார் என பரவி வரும் தகவல்கள் வதந்தி தான் என்றும் விரைவில் அந்த படம் தொடங்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











