சியான் விக்ரமின் சம்பளம் இத்தனை கோடியா?.. ஒருவழியா வந்துட்டாரே ப்பா.. ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்தார். பா.இரஞ்சித் இயக்கியிருந்த அந்தத் திரைப்படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அதேசமயம் விக்ரமின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் நிலவிவருகிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.

Chiyaan Vikram Got 50 Crores Salary For Per Movie

எல்லா ஏரியாக்களிலும் கிங்: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களில் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

தங்கலான்: விக்ரமுக்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கிடைத்து வருடக்கணக்காகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அவருக்கான மவுசு இன்னமும் குறையவில்லை. கடைசியாக அவர் பா. இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியை அந்தப் படம் விக்ரமுக்கு பெற்றுத்தரும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

சுமாரான வரவேற்புதான்: முக்கியமாக பா. இரஞ்சித்தோடு விக்ரம் முதன்முறையாக இணைந்திருந்ததால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு இருந்தது. ஆனால் படத்துக்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்தது. அதற்கு காரணம் பா. இரஞ்சித் அந்தப் படத்தை உருவாக்கிய விதம்தான் என்று பலரும் சொன்னார்கள். அதாவது திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் இரஞ்சித் கொஞ்சம் கவனத்தை சிதற வைத்துவிட்டார். படத்தை புரிந்துகொள்வதற்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தார்கள்.

Chiyaan Vikram Got 50 Crores Salary For Per Movie

அடுத்த படம்: தங்கலான் படத்தை முடித்திருக்கும் விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கி பெரிய கவனத்தை ஈர்த்தவர் அருண்குமார் என்பதால் இப்படமாவது விக்ரமுக்கு ஒரு கமர்ஷியல் ரீதியான ஹிட்டை பெற்றுக்கொடுக்குமா என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள். படமானது இந்த மாத இறுதியில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரமின் சம்பளம்: வீர தீர சூரன் திரைப்படத்தை முடித்துவிட்டு மண்டேலா, மாவீரன் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டு ஓகே சொல்லியிருப்பதாகவும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்ரமின் சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற முடிவெடுத்திருப்பதாகவும்; அதற்கு தயாரிப்பாளர்களும் ஒத்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

FAQs
சியான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ஹீரோயின் யார்?

துஷாரா விஜயன்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X