நடிப்பை விட்டுவிட்டு வேறொன்றில் அதிரடி காட்டும் சீயான் விக்ரம்... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்!
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான சீயான் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான், விக்ரம் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், விக்ரம் எடுத்துள்ள அதிரடி முடிவால் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

கோலிவுட்டின் ரிஸ்க்கி நடிகர்
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என ஆரம்ப காலங்களில் தடுமாறிய விக்ரம், சேது படத்திற்குப் பின்னர் வேற லெவலில் உச்சம் தொட்டார். காசி, பிதாமகன், அந்நியன், ராவணன், தெய்வத் திருமகள், ஐ போன்ற படங்கள் விக்ரமின் தரமான நடிப்புக்கு சான்றாக அமைந்தன. இந்நிலையில், கடந்தாண்டு விக்ரம் நடிப்பில் மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் முதல் பாகம் என மூன்று படங்கள் வெளியாகின.

கை கொடுத்த ஆதித்த கரிகாலன்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகன் துருவ் உடன் விக்ரம் இணைந்து நடித்த மஹான், நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விக்ரம் நடிப்பு எப்போதும் போல கிளஸ்ஸாக இருந்தது. அதேபோல், பலவிதமான கெட்டப்புகளில் அவர் நடித்திருந்த கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால், பொன்னியின் செல்வன் மட்டுமே விக்ரமுக்கு கை கொடுத்தது.

பா ரஞ்சித்தின் தங்கலான்
பிரம்மாண்டமாகவும் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் வெளியான பொன்னியின் செல்வன் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பினாலும், இதில் விக்ரமுக்கு பெரிதாக பங்கு கிடையாது என்பதே உண்மை. இந்நிலையில், தற்போது பா ரஞ்சித்தின் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

விக்ரமின் அதிரடி முடிவு
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான், விக்ரமுக்கு தரமான கம்பேக் படமாக அமையும் என சொல்லப்படுகிறது. விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால், தங்கலான் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்திற்காக விக்ரம் 22 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில், இனி நடிக்கவுள்ள படங்களுக்கு 30 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் விக்ரம்.

அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்
தங்கலான் முடிந்ததும் தான் விக்ரமின் அடுத்த படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனாலும், இப்போது 3 தயாரிப்பாளர்களிடம் இருந்து விக்ரமுக்கு ஆஃபர்கள் சென்றுள்ளதாம். ஆனால், விக்ரம் 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். இதனால், விக்ரமின் அடுத்த பட அப்டேட் எப்போது வெளியாகும் என்பது உறுதியாகவில்லை.


Click it and Unblock the Notifications











