கோமாளி இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சியான் விக்ரம்!

சென்னை : நடிகர் விக்ரம் இப்பொழுது பொன்னியன் செல்வன் என்ற சரித்திர திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம்,கோப்ரா,மகான் உள்ளிட்ட படங்கள் விக்ரமுக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இந்த நிலையில் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன்

தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த நடிகர் விக்ரம் இப்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கி தயாரித்து வரும் பொன்னியன் செல்வன் என்ற சரித்திர திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி உருவாகிவரும் பொன்னியன் செல்வன் திரைப்படம் இப்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார்.

செம ஸ்டைலிஸாக

செம ஸ்டைலிஸாக

கௌதம் மேனனுடன் விக்ரம் இணைந்து பணியாற்றிய துருவநட்சத்திரம் நீண்டகாலமாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஹாலிவுட் படங்கள் போல செம ஸ்டைலிஸாக உருவாகி வந்த இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. மிக விரைவில் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதை களத்தில்

கேங்ஸ்டர் கதை களத்தில்

முதல் முறையாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து இரண்டு வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

கோமாளி இயக்குனர் பிரதீப் இயக்கத்தில்

கோமாளி இயக்குனர் பிரதீப் இயக்கத்தில்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தொடங்க கொஞ்சம் தாமதமாகும் என்பதால் கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கனதன் கூறிய கதைக்கு ஓகே சொல்லியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X