அந்த பேச்சுக்கே இடமில்லை.. பரவி வரும் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த சியான் விக்ரம்!

சென்னை: சினிமாவில் இருந்து சியான் விக்ரம் ஓய்வெடுக்கப் போவதாக வலம் வந்த வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Exclusive: Cobra TRAILER | Vikram | Ajay Gnanamuthu

சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனை இம்மாத இறுதிக்குள் ஓரளவு கட்டுக்குள் வந்தால் தான் மே மாதம் தமிழ் சினிமாவில் படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு

ஓய்வு

மகன் துருவ் விக்ரமின் சினிமா எதிர்காலத்திற்காக நடிப்பதில் இருந்து விக்ரம் ஓய்வெடுக்கப் போவதாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்று வெளியிட்ட செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. சியான் விக்ரம் திடீரென இப்படி ஒரு முடிவை ஏன் எடுக்க உள்ளார் என அவரது ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அந்த பேச்சுக்கே இடமில்லை

அந்த பேச்சுக்கே இடமில்லை

இந்நிலையில், சியான் விக்ரம் குறித்து வெளியான அந்த தகவல் முற்றிலும் வதந்தி என்றும், சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என விக்ரம் தரப்பு தெரிவித்துள்ளது. லாக் டவுன் நேரத்தில் பொழுது போகாமல் யாரோ சிலர் கொளுத்திப் போட்ட விசயம் என்றும் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

செம பிசி

செம பிசி

அப்படியே ஒரு சிந்தனை விக்ரமுக்கு இருந்தாலும், அவர் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா, பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆன பிறகு தானே அறிவிக்கப்படும் என்றும் சியான் விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமாவில் செம பிசியாக இருக்கும் விக்ரம் ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

வெயிட்டிங்

வெயிட்டிங்

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள கோப்ரா படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். ஐரோப்பாவில் செம ஃபைட் சீன் எடுக்க சென்ற கோப்ரா படக்குழு கொரோனா வைரஸ் காரணமாக திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்

அடுத்த படம்

அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ஆதித்யா வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரமுக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது. கர்ணன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேவையில்லை

தேவையில்லை

சியான் விக்ரமை போலவே துருவ் விக்ரம் திறமையானவர், நடிப்பில் தன்னால் எந்த அளவுக்கு அசத்த முடியும் என்பதை அறிமுக படமான ஆதித்ய வர்மா படத்திலேயே நிரூபித்து விட்டார். அவரது எதிர்காலத்தை பார்த்துக் கொள்ள நிச்சயம் தந்தை விக்ரமின் உதவி அவருக்கு தேவைப்படாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X