இவருக்கு மட்டும் வயசு ரிவர்ஸ்ல போகுமோ... புது கெட்டப்பில் கெத்து காட்டும் சியான்

சென்னை : நடிகர் சியான் விக்ரம் தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இன்னும் சில தினங்களில் மகான் படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சியானின் சமீபத்திய ஸ்டில்கள் ரசிகர்களை குஷியாக்கியுள்ளன.

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம்

நடிகர் சியான் விக்ரம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். தனக்கென ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். தன்னுடைய மகன் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ள நிலையிலும் தானும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து நடித்து வருபவர்.

மிரட்டும் நடிப்பு

மிரட்டும் நடிப்பு

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களிலும் இவரது மிரட்டல் நடிப்பு காணப்பட்டது. தன்னுடன் நடிக்கும் இளம் நடிகர்களை ஓவர்கம் செய்யும் திறமை இவரிடம் சற்று தூக்கலாகவே காணப்படுகிறது. அதை சரியான இடத்தில் பிரயோகிக்கும் திறமையும் இவருக்கு அதிகமாகவே காணப்படுகிறது.

மகான் படம்

மகான் படம்

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகனுடன் இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையொட்டி வெளியான ட்ரெயிலர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஸ்டைலான ஹேர்ஸ்டைல்

ஸ்டைலான ஹேர்ஸ்டைல்

ட்ரெயிலரிலேயே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளார் விக்ரம். நல்லவராக இருந்து தன்னுடைய நிலையில் மாறும்போது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஹேர்ஸ்டைல் அனைவரையும் கவரும் வகையில் காணப்படுகிறது.

கெட்டப் சேஞ்ச்

கெட்டப் சேஞ்ச்

முடியை அப்படியே விடுவது, போனி டெயில் போட்டுக் கொண்டு ஒரு கெட்டப் என்று படத்தில் சிறப்பான வகையில் அவர் தனது கெட்டப் சேஞ்ச்களை காட்டுகிறார். முன்னதாக நல்லவராக இருக்கும்போது காணப்படும் கெட்டப்பும் அவருக்கு சிறப்பாக பொருந்துகிறது.

ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். விக்ரமின் படம் ஓடிடியில் ரிலீசாவது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் அவரை எப்படியாவது திரையில் பார்க்கும் அவர்களது ஏக்கம் மற்ற அனைத்தையும் பின்தள்ளி விட்டுள்ளது.

புதிய ஸ்டில்கள்

புதிய ஸ்டில்கள்

இந்நிலையில் அவரது புதிய கெட்டப்புடனான ஸ்டில்கள் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில் மகான் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். மனுஷனுக்கு வயது பின்னோக்கி செல்கிறதா என்ற சந்தேகம் இந்தப் படங்களை பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X