Vikram Net Worth - சியான் விக்ரம் 60ஆவது பிறந்தநாள்.. மிரள வைக்கும் சொத்து மதிப்பு தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவரான விக்ரம் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். மேலும் இந்த பிறந்தநாளிலிருந்தாவது அவருக்கு பெரிய வெற்றி படங்கள் வர வேண்டும் எனவும் வேண்டுகிறார்கள் ரசிகர்கள். ஏனெனில் எவ்வளவு உழைப்பை போட்டு நடித்தாலும் அந்தப் படம் விக்ரமுக்கு சுமாரான ஹிட் அல்லது தோல்வியையே கொடுக்கிறது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.
சினிமாவில் யாரின் துணையும் இல்லாமல் வந்தவர்களில் அஜித்துக்கு முன்னோடி சியான் விக்ரம். சீரியல் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை செய்தார். பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் மீரா படத்தில் நடித்தும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் இயக்குநர் பாலாவோடு சேர்ந்து சேது படத்தில் பணியாற்றினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. பாலா, விக்ரம் இரண்டு பேருக்குமே புது வாழ்க்கை கிடைத்தது. அதுவும் விக்ரமுக்கு ஒரு ஹீரோவாக அது அதிரிபுதிரியான வரவேற்பு ஆகும்.

முன்னணி ஹீரோ: சேது படத்தின் வெற்றிக்கு பிறகு கமர்ஷியல், ஆர்ட் ஃபிலிம் என இரண்டு ஜானர்களிலுமே பயணித்தார். கமர்ஷியலாக அவர் கொடுத்த தில், தூள், சாமி, ஜெமினி படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. மறுபக்கம் பிதாமகன், காசி என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. ஒருகட்டத்தில் அஜித், விஜய்யைவிடவும் விக்ரம்தான் முன்னணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ் இயக்குநரிலிருந்து க்ளாஸ் இயக்குநர் வரை அத்தனை பேரின் தேர்வாக இருந்து கலக்கினார்.
சறுக்கிய விக்ரம்: நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவரது மார்க்கெட். ஆனால் கந்தசாமி, ஐ போன்ற படங்கள் ரிலீஸுக்கு முன்னதாக ஓவர் ஹைப்பை பெற்றன. படங்களும் தோல்வியை சந்தித்தன. அப்போதிருந்தே விக்ரமுக்கு சறுக்கல் ஏற்பட ஆரம்பித்தது. அவரிடமே சென்று, உங்களுக்கு கடைசியாக தியேட்டரில் வெளியாகி மெகா ஹிட்டான படம் எதுவென்று கேட்டால் அவருக்கே நியாபகம் இருக்காது. அவரும் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான், அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படத்தில் எல்லாம் நடித்தார். ஆனால் படங்கள் தோல்விகளைத்தான் கொடுத்தன.
அடுத்த படங்கள்: அவரது அடுத்த படங்கள் லைன் அப் கொஞ்சம் நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது. சியான் 63ஐ போடி ராஜ்குமாரும், சியான் 64ஐ போடி ராஜ்குமாரும், அடுத்த படத்தை ஆனந்த் சங்கரும் இயக்கவிருக்கிறார்கள். இதற்கிடையே 96 இயக்குநர் பிரேம்குமாருடன் ஒரு படத்தில் இணையவிருந்தார். கிட்டத்தட்ட அந்த கூட்டணி உறுதியாகியிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் நடக்கவில்லை. இருப்பினும் இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்நிலையில் விக்ரம் இன்று தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விக்ரம் சொத்து மதிப்பு: அதனையொட்டி பலரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். மேலும் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி அவரிடம் மொத்தம் 150 கோடி ரூபாய்வரை சொத்து இருக்குமாம். சென்னையில் 55 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களா இருக்கிறது. மேலும் அவரிடம், 8 கோடி ரூபாய் மதிப்பு ரோல்ஸ் ராய்ஸ், 4 கோடி மதிப்புள்ள போர்ஷ், 3 கோடி மதிப்புள்ள ஆடி ஆர் 8 ஆகிய சொகுசு கார்கள் இருக்கின்றன. ஒரு படத்துக்கு 35 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம். தனது சம்பளத்தை பிற தொழில்களிலும் முதலீடு செய்து அதிலிருந்து இரட்டிப்பு லாபத்தை சியான் பார்த்துவருவதாக திரைத்துறையினர் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
