பாசக்கார அம்மா..மகனுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த கலா மாஸ்டர்!

சென்னை: முன்னணி நடன இயக்குனராகப் பல தசாப்தங்களாக வலம் வருபவர் கலா மாஸ்டர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர். நான் எனது 37-வது வயதில் தான் கர்ப்பமானேன். அந்த வயதில் அது லேட் பிரக்னன்சிஎன்று கூறி, என்னை வீட்டிலேயே பத்திரமாக இருக்கச் சொன்னார்கள். எங்கும் பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், நான் இந்த நேரத்தை விட்டுவிட்டால் மறுபடியும் இந்த வாய்ப்பு கிடைக்காது என, எதையும் பொருட்படுத்தாமல் காலை, மாலை, இரவு எனப் படப்பிடிப்புகளுக்காக ஓடிக்கொண்டே இருந்தேன். அந்த நேரத்தில் தான் என்னுடைய மகன் பிறந்தான். அவன் என் தெய்வம், என்னுடைய மகன் பிறந்ததுமே எங்கள் குடும்பத்தினுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே அப்படியே மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.

மகனுக்கு கார்: மகன் மீது அளவுகடந்த அன்பும் தீராத பாசமும் வைத்திருக்கும் கலா மாஸ்டர், தற்போது தனது செல்ல மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில், திரையுலகினரும் இளைஞர்களும் ஆவலோடு விரும்பும் மாஸான 'மஹிந்திரா தார்' காரை பரிசாக வாங்கி அசத்தியுள்ளார். ஷோரூமில் தனது மகனுடன் இணைந்து புதிய காரை டெலிவரி எடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

Kala Master son New car

மஹிந்திரா தார் விலை : இளைஞர்களின் ஆல்டைம் ஃபேவரிட் எஸ்சிஓ வாகனமாக மஹிந்திரா தார் வலம் வருகிறது. கலா மாஸ்டர் தனது மகனுக்குப் பரிசளித்திருப்பது செம்ம கெத்தான பிளாக் நிற மஹிந்திரா தார் காரின் ஆரம்ப விலை தோராயமாக ₹11.39 லட்சம் முதல் தொடங்குகிறது. வரிகள், இன்சூரன்ஸ் மற்றும் இதர பதிவுக் கட்டணங்கள் என அனைத்தையும் சேர்த்தால், இந்த காரின் ஆன்-ரோடு விலை தோராயமாக ₹14 லட்சம் முதல் ₹22 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. பாசக்கார அம்மாவான கலா மாஸ்டர் தனது விலைமதிப்பற்ற அன்புப் பரிசை கொடுத்துள்ளார்.

கலா மாஸ்டர்: 12 வயதில் உதவி நடன இயக்குனராக சினிமாவிற்குள் வந்த கலா, 1986 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் நடன இயக்குநராக மாறினார். அந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைந்துள்ளார். இவர், 2004 ஆம் ஆண்டு மகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X