For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தீபாவளி திரை வெடி!

  By Staff
  |

  தீபாவளி கொண்டாட்ட பட்டியலில் பட்சணங்கள், பட்டாசுகளோடு புதுப் படங்களின்ரிலீஸும் கண்டிப்பாக உண்டு.

  அந்தக் காலத்தில் தீபாவளியன்று கமல், ரஜினி படங்கள் போட்டி போட்டுவெளியாகும். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இப்போதும்அப்படித்தான் விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் என ஏகப்பட்ட பார்ட்டிகள் வந்துவிட்டதால் ஒவ்வொரு தீபாவளியன்றும் இவர்களின் படங்களை எதிர்பார்க்கஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

  ஆனால் இந்த தீபாவளிக்கு இவர்களில் தல படம் மட்டுமே ரிலீஸாகிறது. மற்றபெருந்தலைகள் இந்த தீபாவளிக்கு தலை காட்டவில்லை.

  அஜீத்தின் வரலாறு (மன்னாள் காட்பாதர்), சிம்புவின் வல்லவன், ஆர்யாவின்வட்டாரம், ஜீவாவின் ஈ, ஸ்ரீகாந்த்தின் கிழக்கு கடற்கரைச் சாலை, சரத்குமாரின்தலைமகன், விஜயகாந்த்தின் தர்மபுரி ஆகிய படங்கள் தீபாவளிக்கு விருந்து படைக்கவருகின்றன.

  தீபாவளி ரிலீஸிலேயே அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படங்கள் என்றுபார்த்தால் எல்லாப் படங்களுமே ஒரு வகையில் ஸ்பெஷலாகவே அமைந்துள்ளதுவியப்பான உண்மை.

  சிம்புவின் வல்லவன்:

  முதல் படம் வல்லவன். கமல்ஹாசன் மாதிரி பன்முகத் திறமை படைத்த இளம்படைப்பாளி என சிம்புவை கோலிவுட் புகழாரம் சூட்ட ஆரம்பித்திருப்பதால்,சிம்புவின் முதல் இயக்கத்தில் வெளியாகும் வல்லவன் பெரும் எதிர்பார்ப்புகளைஏற்படுத்தியுள்ளது.

  ஒரு காலத்தில் கமல்ஹாசனின் ஆஸ்தான உதவியாளராக இருந்த தேனப்பன்தான்இப்படத்தை தயாரித்திருக்கிறார். சிம்புவுடன் நயனதாரா, ரீமா சென், சந்தியா எனமூன்று ஜோடிகள்.

  அட்டகாசமான திரைக் கதையுடன் வல்லவன் படு ஜம்மென்று வந்திருப்பாககோலிவுட்டில் கூறிக் கொள்கிறார்கள். படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிஹீட்டை கிளப்பி விட்டுள்ளதால் வல்லவனை எதிர்பார்த்து சிம்புவின் ரசிகர்கள்மட்டுமல்லாது சினிமாப் பிரியர்களும் காத்துக் கொண்டுள்ளனர்.

  சிம்புவின் இயக்கம், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, ரீமா சென்னின் மிரட்டல் நடிப்பு,நயனதாராவின் கவர்ச்சிக் காதல் என ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளுடன் வல்லவன்திரைக்கு வருகிறான்.

  இத்தனை பேரையும் சிம்பு எப்படி கையாண்டிருக்கிறார் என்பதே பெயஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரண காதல் கதைதான். ஆனால் கூடவேதிரில்லராகவும் வித்தியாசப்படுத்தி எடுத்திருக்கிறேன் என்கிறார் சிம்பு.

  அஜீத்தின் வரலாறு:

  அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படம் வரலாறு. காட்பாதர் என்ற பெயரில் உருவானஇப்படம் இப்போது வரலாறு என பெயர் மாறியுள்ளது. அஜீத், ஆசின், கனிஹாஆகியோரின் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

  வல்லவனைப் போலவே இந்த வரலாறும் பல்வேறு சர்ச்சைகளின் பின்னணியில்உருவாகியுள்ளது. படம் உருவாகியும் வெளி வருவதில் சிக்கல்கள் நிலவியதால்வரலாறு தாமதமாக வெளியாகிறது.

  லேட்டாக வந்தாலும் வரலாறு, புதிய வரலாறு படைக்கும் என நம்பிக்கைதெரிவிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதில் அஜீத் மூன்று வேடங்களில் நடித்துள்ளார்.அதில் அரவாணி வேடமும் ஒன்று.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.சி.ஸ்ரீராம் தனது கேமராவுடன் கலகலக்க வைக்கவருகிறார். இதற்கு முன்பு ரவிக்குமாரும், அஜீத்தும் இணைந்த வில்லன் பெரும்வெற்றிப் படமானது. தொய்ந்து போய்க் கொண்டிருந்த அஜீத்தின் மார்க்கெட்டைதூக்கி நிறுத்த வில்லன் உதவியது.

  மறுபடியும் இணைந்திருக்கும் இருவரும் வரலாறு படைப்பார்களா என்பதைபடத்தைப் பார்க்கப் போகும் ரசிகர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

  சரத்குமாரின் தலைமகன்:

  இன்னொரு பரபரப்புப் படம் தலைமகன். சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் இயக்கத்தில்வெளியாகும் முதல் படம் என்ற போனஸ் எதிர்பார்ப்போடு களம் காணுகிறதுதலைமகன்.

  மனைவி ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் தயாரிப்பு இது. பிரமாண்டமானபட்ஜெட்டுடன் தலைமகன் உருவாகியிருக்கிறான்.சரத்தின் 100வது படம் என்ற பெருமையும் தலைமகனுக்கு சேர்ந்துள்ளது.

  சரத்துக்கு ஜோடியாக நடித்திருப்பது நயனதாரா. அவரது முதல் படமான ஐயாவுக்குப்பிறகு சரத்துடன் மீண்டும் இணைந்துள்ளார் நயனதாரா.இதில் பத்திரிக்கை நிருபராக வருகிறார் சரத். நயனதாராவும் நிருபராகவே வருகிறார்.சரத்தின் எதிரிகளாக சீமா பிஸ்வாஸ், ஜான் விஜய், முகேஷ் திவாரி ஆகியோர்வருகிறார்கள்.

  பாண்டிட் குவீன் படத்தில் பூலான் தேவி வேடத்தில் அசத்திய சீமா பிஸ்வாஸ்வில்லியாக வந்து கலக்கலாக அசத்தியுள்ளாராம். அதிரடி வடிவேலுவின் காமெடிபடத்திற்கு பெரிய பிளஸ் பாயிண்டாக வந்துள்ளது. இதில் பத்திரிக்கைபுகைப்படக்காரராக வருகிறாராம் வடிவேலு.

  சுற்றுச்சூழல், குடிநீர் பற்றாக்குறை ஆகிய முக்கியப் பிரச்சினைகளை வைத்து இந்தக்கதையை பின்னியுள்ளாராம் சரத். இயக்கத்தில் சரத்துக்கு இது தலைப் பிரசவம்.நார்மல் டெலிவரியாக இருக்கும் என்று சரத் தரப்பு படு நம்பிக்கையாக உள்ளது.

  விஜய்காந்தின் தர்மபுரி:

  அடுத்தது கேப்டன் விஜயகாந்த்தின் தர்மபுரி. அரசியல்வாதியாகி அசத்திக்கொண்டுள்ள விஜயகாந்த், கட்சி ஆரம்பித்த பின்னர் நடித்து வெளியாகும் படம்என்பதால் தர்மபுரிக்கு நிறைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  சரவெடி இயக்குனர் பேரரசுவின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில்உருவாகியுள்ள தர்மபுரியில், கேப்டனுக்கு ஜோடி போட்டிருப்பவர் லட்சுமி ராய்.

  இந்தப் படத்தில் அரசியல் கிடையாது என்று பேரரசு கூறுகிறார். ஆனால், மக்கள்மனதில் கேப்டனை இன்னும் ஆழமாக பதிக்கும் வகையில் அவரது கேரக்டர்உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பேரரசு. அது போதுமேய்யா.

  ஜீவாவின் ஈ:

  இதேபோல ஜீவா, நயனதாரா ஜோடியில் உருவாகியுள்ள ஈ படமும் பெரும்எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. இயற்கை என்ற அருமையான படத்தை இயக்கியஜனநாதன்தான் ஈ படத்தையும் இயக்கியுள்ளார்.

  இந்தப் படமும் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்தது. இதில் ஹீரோ ஜீவாவை மிகவித்தியாசமாக காட்டியுள்ளாராம் ஜனா. அவருக்கு ஜோடி போட்டிருப்பவர்நயனதாரா. இப்படத்தில் நயனதாராவுக்கு மேக்கப் மிகவும் குறைச்சலாம்.இயற்கையான தோற்றத்துடனேயே பெரும்பாலான காட்சிகளில் வலம் வரவைத்துள்ளாராம் ஜனா.

  இதில் நயனதாரா மும்பை பார் டான்ஸராக நடிக்கிறார். இப்படமும் தீபாவளி ரேஸில்பரபரப்பாக ஓடக் காத்திருக்கிறது. ஈ ஓடுமா அல்லது தியேட்டர்களை ஈ ஓட்டவைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

  ஆர்யாவின் வட்டாரம்:

  ஆர்யா, கீரத், அதிசயா என இளமைப் பட்டாளத்துடன் சரண் இயக்கம் பிளஸ்தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வட்டாரம். இப்படமும் ஆரம்பத்தில் ஆர்யாவால்சில பஞ்சாயத்துக்களை சந்தித்தது. அதைக் கடந்து அற்புதமாக உருவாகியுள்ளதாம்.

  சென்னையின் பர்மா பஜாரை கதைக் களமாக கொண்டு இப்படத்தைஉருவாக்கியுள்ளார் சரண். லக்மே விளம்பரத்தில் நடித்தவரான கீரத் இதில்ஆர்யாவுடன் ஜோடி போட்டுள்ளார். அதேபோல அதிசயா என்ற அழகக் குயிலும்கூடவே டூயட் பாடியுள்ளது.

  கையில் அரிவாளும், தொள தொள தொடை தெரிய அண்டர்வேருமாகவே பலபடங்களில் வாழ்ந்து விட்ட நெப்போலியன் இப்படத்தில் ஹைடெக் மனிதராகவருகிறார். படம் படு வித்தியாசமாக வந்திருப்பதாக கோலிவுட் டாக் கூறுகிறது.

  இவை தவிர ஸ்ரீகாந்த், பாவனா நடிப்பில் உருவாகியுள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை,அர்ஜூனின் வாத்தியார் ஆகிய படங்களும் களத்தில் உள்ளன.

  இந்தப் படங்கள் தவிர மறந்தேன் மெய் மறந்தேன், வசந்தம் வந்தாச்சு, தேசியப்பறவை ஆகிய படங்களும் கூட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் எனத் தெரிகிறது.

  Read more about: diwali release films
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X