ஹீரோ .. ஹீரோ ..

By Staff

அஜீத்தும், விஜய்யும் செய்யும் சில காரியங்களால் மக்களுக்கு அடிக்கடி சில சந்தேகங்கள் வந்து விடுகின்றன.

விஜய் நாளை தனது 28வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடவுள்ளார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு கேக் வெட்டி, விருந்து கொடுத்துபிரமாதப்படுத்தப் போகிறார்.

இதையொட்டி நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், நீங்கள் அரசியலுக்கு வரப் போகிறீர்களா என்ற பழைய பஞ்சாங்கத்தையே சினிமா நிருபர்கள் பாட,அதற்கு விஜய் நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை, ஆனால் கொஞ்சம் அனுபவம் வேண்டும், எனக்கு அந்த அளவுக்கு இன்னும் அனுபவம்வரவில்லை. ஆனால் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்று பதில் தந்தார்.

விஜய்யின் பேட்டி மூலம் நமக்குப் புரிவது, இப்ப வர மாட்டேன், ஆனால் பின்னாடி வந்தாலும் வரலாம் என்று அவர் கூறுவதாகவே தெரிகிறது.

அதேபோல, அஜீத்தின் ராஜா படத்தில் சில அரசியல் வசனங்கள் இருக்கிறதாம். குறிப்பாக, நான் தனி ஆள் இல்லே, என் பின்னாடி ஒருகூட்டமே உள்ளதுஎன்று அடிக்கடி கூறுகிறாராம் அஜீத்.

ரஜினி, விஜய்காந்த் போன்ற மூத்தோர்களும் இதையே தான் பல்லாண்டு காலமாக கூறிவருகிறார்கள். ஆனால், வந்த பாட்டைக் காணோம் (வராதவரைக்கும் அவர்களுக்கும் எல்லோருக்கும் நல்லது!). இவர்கள் வைத்து வரும் சஸ்பெண்ஸ் காரணமாக உந்தப்பட்ட மக்கள் சோறு தண்ணிமறந்து இவர்களது சினிமா பார்த்து அதை நூறு நாட்கள், இருநூறு நாட்கள் ஓட வைக்கிறார்கள்.

இவுங்க போதாதுன்னு இப்ப நீங்களாப்பா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X